பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


போகின்றனர்! அவர்கள் மேற்கொள்ளும் சில தகாத செயல்கள் சமூகத்தோடும் தம் கணவன்மாரோடும் முரண்பாட்டினை விளைவிக்கின்றன. இவை மணமுறிவினை உண்டாக்குவதுடன் சமூகத்தில் அவர்கட்கு இடம் இல்லாமலும் செய்கின்றன். சில சமயம் ஒழுக்கத்தை நாடும் பெண்களிடமும் தம்முடைய பால் துடிப்புகளைத் திருப்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக வன்மையாகத் தோன்றி அவர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து விடுகின்றது. இப்பருவத்திலுள்ள சில பெண்கள் ஒரே ஒரு மனவெழுச்சி மிக்க காமக் களியாட்டத்தைப் பெறுவான் வேண்டிப் பணம், காதல், நட்பு முதலியவற்றையெல்லாம் பறிகொடுத்து அனைத்தையும் துறக்கின்றனர்; அல்லது மறக்கின்றனர். இத்தகைய பெண்கள் பெரும்பாலும் இளைஞர்களையே-சில சமயம்சிறுவர்களையும்-கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டு தம்முடைய இன்ப வாழ்க்கையின் 'ஈமச் சடங்கு' போன்ற நாடகத்தை நடித்து முடிக்கின்றனர். இன்றைய வாழ்க்கையில் நாம் பல எடுத்துக்காட்டுகளின் மீது இடறித்தான் விழ வேண்டும்! வயதாகிக் கிழப்பருவத்தை நோக்கிச் செல்லும் பெண் மறைந்து போகும் தன் இளமையை நம்பிக்கையின்றிப் பற்றிக் கொண்டு பருவம் முதிறாத பாலகனைக் காதலனாகக் கொண்டு நடத்தும் வாழ்க்கையின் இறுதி நாடகம் பல புதின ஆசிரியர்கட்குக் கதைப் பொருளாக இருந்து வருகின்றது. டாக்டர் மு. வ வின் 'மலர்விழி’ என்ற புதினத்தில் வரும் கலெக்டர் செல்வநாயகத்தின் வங்காள மனைவியும், நாம் நன்கறிந்த இதிகாசமான இராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாவார்கள். இதனால்தான் தகாத முறையில் காம இச்சையுடன் வந்த சூர்ப்பணகையை இலக்குவன்,

மூக்கும் காதும்வெம் முரண்முலைக்
கண்களும் முறையாற்
போக்கிப் போக்கிய சினத்துடன்
புரிகுழல் விட்டான்.83

என்று எண்ண வேண்டியுள்ளது. வாத்ஸ்யாயனர் தம் காமசூத்திரம்' என்ற நூல்கள் உணர்ச்சிகளைத் துாண்டும்


85. கம்பரா. ஆரணிய-சூர்ப்பணகைப்-94