பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் அன்றும்

65


மையங்களாக (Erotic centres) உடலிலுள்ள சில இடங்களை, குறிப்பிடும்போது மூக்கு காது மடல், முலைக்கண் இவற்றையும் குறிப்பிடுவர். உடலிலுள்ள சில புற்றுநோய் இழையங்களை (Cancerous tissue) அறுவை மருத்துவர் நீக்குவது போல களையை வேருடன் நீக்குவது போல, உணர்ச்சி மையங்களை மூலத்துடன் எடுத்தான் இலக்குவன் அறுவை சிகிச்சை மூலம்! நான் என் வாழ்க்கையில் கண்ட மூன்று எடுத்துக் காட்டுகள் உள்ளன. அவற்றை ஈண்டுக் கூறுவது அசம்பாவிதம். நீங்களும் சமூகத்தைக் கூர்ந்து நோக்கினால் சில உங்கள் கவனத்திற்கும் தட்டுப்படும்.

மன கிறைவுடைய கற்புடை மகளிர்: மேற்காட்டிய சிலர் ஓர் எல்லைக்குட்பட்டவர். அந்த எல்லையின் எதிரெல்லையில் உள்ளவர்கள் சிலரையும் காட்டுவேன். இச்செயல்கள் யாவும் எல்லாப் பெண்களிடமும் தோன்றும் செயல்கள் என்று கருதுதல் வேண்டா. பல குழந்தைகட்குத் தாயாகிக் குடும்ப பாரத்தைத் தாங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பிலும் கல்வியிலும் ஈடுபட்டுக் கவலை கொள்ளும் பெண்களும், அல்லது சமூக அலுவல்களிலும் பிற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பெண்களும் இவ்வழிகளில் எளிதாகத் திரும்புவதில்லை. பெரும்பாலும் குழந்தைகளின்றி இருக்கும் காமம் மீதுார்ந்து நிற்கும் பெண்களும், யாதொரு திட்டமான வேலையுமின்றி சதாகளியாட்டம், கேளிக்கை, சொகுசான வாழ்க்கை, காலவண்ணம் (Fashion) சதா தன் உடலைப் பற்றிய கவனம் போன்றவற்றில் நாட்டமுள்ள பெண்களும் மேற்கூறிய எல்லை மீறிய செயல்கட்கு இலக்காகின்றனர். இதற்கு மாறாகப் பெரும்பான்மையான பெண்கள் இன்பகரமான இல்வாழ்க்கைக்குப் பின்னர் யாதொரு அக முரண்பாடுகளின்றியே இந்தப் பருவத்தைத் தாண்டுகின்றனர். இதனைக் கடந்தபின்னர் இயல்பாக நடைபெற வேண்டியவற்றில் தன்னையே மறந்து மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையில் திளைக்கின்றனர்.

காமம் சான்ற கடைகோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொகு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்தன் பயனே.84


84. தொல். பொருள். கற்பு-51. (இளம்)

த-5