பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


என்ற தொல்காப்பியர் கூறும் குறிக்கோளுக்கும் இலக்காகின்றனர். இக்காலத்தில்தான் சில கணவன்-மனைவிமாரிடம் உண்மை நட்பும் அன்னியோனியமும் ஏற்படுகின்றன.

சூதக ஒய்விற்குப் பின்னர் கலவி : சூதக ஒய்வு ஏற்பட்ட நீண்டகாலம் வரையிலும் பால்விழைவு பெண்களிடம் இருக்கத் தான் செய்கின்றது; சிலரிடம் அதிகமாகவும் உள்ளது. இனப் இபருக்கத் திறன் நின்று போவது பாலூக்கம் மறைவதற்குக் காரணமாவதில்லை. வயதான பெண்ணிடம் சாதாரணமாகப் பால் வேட்கை மறைதல் இயல்பே. ஆயினும் சூதக ஒய்வு நின்ற பின்னரும் ஒரு பெண்ணிடம் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் வரையிலும் - அதற்கு மேலும் - தீவிரமான பால்விடாய் உள்ளது. அறுபது வயதிற்கு மேலும் ஒரு பெண் மட்டான முறையில் பால் உறவு கொள்ளலாம். சூதக ஒய்வுக் காலத்தில் உள்ளிருக்கும் பாலுறுப்புகளில் மிகத் தளர்ச்சி ஏற்பட்டுவிடுவதால் அவை ஊறு நேர்வதைத் தடுக்கும் ஆற்றலை இழந்து கிடக்கின்றன. எனவே, இக்காலத்தில் கலவிபுரியும் கணவன் மிக அதிகமான பாதுகாப்பினை மேற்கொள்ளுதல் வேண்டும். இந்நிலையிலும் ஏதாவது ஊறு விளைவதாகத் தெரிந்தால், கலவியை அடியோடு விட்டொழித்து விடுதல் வேண்டும். இக்காலத்தில் கணவன் மனைவிமீது அன்புடனிருப்பின் அதுவே கலவியைவிட் அவளுக்குப் பேரின்பத்தைத் தரும் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

8. மருத்துவ இயல் : பண்டை இலக்கியங்களில் மருத்துவ இயல்பற்றிய செய்திகளையும், சிகிச்சை முறைகளையும் காணலாம்.திருக்குறளிலுள்ள 'மருந்து' என்னும் அதிகாரத்தில் நோய் வருவதன் காரணங்களையும் அது வராது தடுக்கும் முறைகளையும் வந்தால் தீர்க்கும் வழியையும் பற்றிய பல்வேறு செய்திகள் தரப்பெறுகின்றன.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.85

என்பது வள்ளுவரின் மருத்துவ முறை. நோய் வருவதன் காரணத்தையும், நோய் இன்னதென்பதையும் ஐயமறத் துணிந்து மருந்து செய்தல், உதிரங்களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய


85. குறள் - 948.