பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


இப்பாடலில் குறிப்பிடப் பெறும் செய்திகளை எண்ணி எண்ணி உணர்ந்து மகிழவேண்டும். நவீன மருத்துவர்களும் அறியாத எவ்வளவு செய்திகள் இதில் காட்டப்பெறுகின்றன!

9. கணித இயல்: கணித உண்மையைச் சுவையாக எடுத்துக் காட்டுவதற்கு கம்பனில் ஒரு நிகழ்ச்சி மூலம் அறியலாம். மூலபலம் இலங்கையில் வந்து திரளுகின்றது; எல்லாத் திக்குகளிலிருந்தும் எண்ணற்ற அரக்கர்கள் வந்து திரளுகின்றனர். வந்த சேனையின் அளவைக் கணக்கிட்டுக்கூறும்படிக்கேட்க,அதற்குத் தூதுவர், "இச்சேனையின் அளவு ஆயிரம் வெள்ளம் என உரைப்பர் பித்தர்; கணித நூலிலுள்ள உச்ச எண்ணே இதனை அளவிட்டுரைத்தற்குச் சாலாது” என்று பதிலிறுக்கின்றனர். 'வெள்ளம்' என்ற அளவினை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தொன்று தொட்டு வழங்கிய தமிழ் எண்களையும் இடைக்காலத்தில் வந்து புகுந்த வடமொழி எண்களையும் பிங்கலந்தை என்ற நிகண்டு நூல் பின் வருமாறு வகைப்படுத்தித் தொகுத்து உரைக்கின்றது.

'ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி’
'கோடி எண்மடங்கு கொண்டது சங்கம்'
'சங்கம் எண்மடங்கு கொண்டது விந்தம்'
'விந்தம் எண்மடங்கு கொண்டது குமுதம்'
'குமுதம் எண்மடங்கு கொண்டது பதுமம்’
'பதும்ம் எண்மடங்கு கொண்டது நாடு'
'நாடு எண்மடங்கு கொண்டது சமுத்திரம்’
‘சமுத்திரம் எண்மடங்கு கொண்டது வெள்ளம்'

இம்முறைப்படி நோக்கினால் எட்டாம் தானத்தது கோடி. பதினைந்தாம் தானத்தது சங்கம். இருபத்திரண்டாம் தானத்தது விந்தம். இருபத்தொன்பதாம் தானத்தது குமுதம். (ஆம்பல்). முப்பத்தாறாம் தானத்தது பதுமம் (தாமரை). நாற்பத்து மூன்றாம் தானத்தது நாடு (குவளை). ஐம்பதாம் தானத்தது சமுத்திரம் (நெய்தல்). ஐம்பத்தேழாம் தானத்தது வெள்ளம் என்பது புலனாகும். இவற்றை இன்றைய கணித, வாய்ப்பாட்டில் எழுதினால்,