பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

69




கோடி — 107
சங்கம் — 1014
விந்தம் – 1021
குமுதம் – 1028
பதுமம் – 1036
நாடு – 1042
சமுத்திரம் – 1049
வெள்ளம் – 1058

இந்தக் கணித எண்ணை மனத்தால் அறிந்து பார்ப்பது எளிதன்று. கணித உண்மை நம் சிந்தையை எட்ட முடியவில்லை. ஆனால் இந்தச் சேனையின் அளவைக் 'கவிதை உண்மை’யால் காண்போம். மூலபலம் முழுவதும் ஏழரை நாழிகைக்குள் இராமன் கணையால் அழிந்துபடுகின்றது. இதனைக் கம்பநாடன்,

ஆனை ஆயிரம் தேர்பதி னாயிரம்
அடல்பரி ஒருகோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர்படின்
கவந்தம்ஒன் றெழுந்தாடும்;
தானம் ஆயிரம் கவந்தம்நின்று ஆடிடின்
கவின்மணி கணில்என்னும்;
ஏனை அம்மணி ஏழரை நாழிகை
ஆடியது இதனன்றே88

என்று கூறுவான். ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர்கள் ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் சேனைக் காவலர்கள் இறந்து பட்டால், தலை இல்லாத பேய் (கவந்தம்) ஒன்று எழுந்து ஆடுமாம். ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் இராமனது கோதண்டத்தில் கட்டிய அழகிய மணி ஒருமுறை 'கணீல்' என்று ஒலிக்குமாம். ஆனால் இராமனது மூலபலவதைப் போரில் அம்மணி தொடர்ந்து, தீயணைக்கும்படையினர் செல்லும் மோட்டார் வண்டியில் ஒலிக்கும் மணியோசை போல, ஏழரை நாழிகை விடாது ஒலித்ததாம். கவிஞன் கூறும் இந்த உண்மையைக் கொண்டு அழிந்துபட்ட மூலபலச் சேனையின் அளவை ஓரளவு நம் மனத்திரையில் அமைத்துக் கொள்ளமுடிகின்றது. மூல பலத்தின் அளவை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுகின்றோம்.


88. மூலபலம் -218