பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



வைக் கல்வி முறையின் காப்பர்னிகஸ் என்று கூறுவர். பூமியை நடுவாக வைத்துதான் ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற பழைய கொள்கையை காப்பர்னிகஸ் மறுத்து கதிரவனை நடுவாகக் கொண்டுதான் அவைகள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது போலவே, அதுகாறும் கல்வி ஏற்பாட்டினை (Curriculum) நடுவாக வைத்துக் கற்பிக்கும் முறையைத் தவறு எனக் கண்டித்து, குழந்தையை நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெற வேண்டும் என்று கூறினார் ரூஸோ. "குழந்தையை நன்றாக ஆராய்க; குழந்தையை அறிவது. எளிதல்ல," "குழந்தையைக் கவனி; இயற்கையோடு இசைந்து நட" என்பவை ரூஸோ கல்வித்துறையில் பணியாற்றுவோருக்குக் காட்டிய மாபெரும் உண்மைகள். இவர் கொள்கை உளவியல் உண்மையை ஒட்டியும் உள்ளது. அன்றியும், இவர் புலன்கள் வாயிலாகத்தான் கற்பிக்க வேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறினார். ரூஸோவின் கல்வி பற்றிய கருத்துகளை வகுப்பறையில் நன்கு பயன்படச் செய்தவர் ஜொகான் ஹெய்ன்ரிச் யெஸ் டலாஸ்லி என்ற ஸ்விட்ஸர்லாந்து நாட்டு அறிஞர். இவர் குழந்தையை விதையாகக் கருதினார். விதைக்குள் எதிர்காலத்தில் பெரிய மரமாகும் ஆற்றல் சிறுவடிவில் உறைந்திருப்பது போல் (Latent) பிற்காலத்தில் வெளிவர வேண்டிய பேராற்றல்கள் குழந்தைகளிடம் உள்ளுறைந்து கிடக்கின்றன என்று இவர் எண்ணினார். இவ்வாற்றல்களை வெளிப்படுத்தலே கல்வியின் நோக்கமாக இருத்தல் வேண்டும் என்றும் இவர் கருதினார். எனவே, இவர் புலன்கள் வாயிலாகத்தான் கல்வி புகட்டப் பெறல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவரும் ஏட்டுப் படிப்பை ஆதரித்தாரிலர். "சொற்களுக்கு முன் பொருள்கள்” என்பது இவர் கொள்கையின் உயிர் நாடி.

ஜொகான் பிரைடெரிக் ஹெர்பார்ட் என்ற செருமானியப் பேராசிரியர் மனத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்; மனம் செயற்படுவதைப்பற்றிய பல உண்மைகளைக் கண்டார். மனம் எவ்வாறு வெளியுலக அநுபவத்தை வாங்கிக்கொண்டு தன்வயமாக்கிக் கொள்ளுகின்றது என்பதை ஒரு கொள்கையாக விளக்கம் தந்து, கற்பித்தலின் ஐந்து படிகளை உலகிற்கு, உணர்த்தினார். இந்த ஐந்து படிகளின் வழியாகத்தான் மனம் வெளியுலக அநுபவத்தைப் பெறுகின்றது என்பது