பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

75



ஹெர்பார்ட் நமக்குக்காட்டிய உண்மை. மனத்தைத் தயாரித்தல், எடுத்துக்கூறல், ஒப்பிடல், பொது விதி காணல், விதியைச் செயற்படுத்தல் ஆகியவை இவர் கண்ட ஐந்து படிகள் (Five Steps of Herbart). இந்த ஐந்து படிகளை அறிந்தோ அறியாமலோ பல அறிஞர்கள் கற்பித்தலில் கையாண்ட போதிலும் இவற்றை வரையறை செய்து உலகிற்கு முதன் முதலாக உணர்த்திய பெருமை ஹெர்பார்ட்டையே சாரும். மனத்தைத் தயாரித்தல் என்பது, கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் மனத்தைப் புதிதாகக் கற்கப்போகும் பொருளை வாங்கிக் கொள்வதற்குத் தயாரித்தல் ஆகும். எடுத்துக்கூறல் என்பது, பழைய அநுபவங்களையும் புதியனவாக அமைந்த அநுபவங்களையும் இயைபுப்படுத்திப் பார்த்தலாகும். இயைபுபடுத்திக் கண்டவற்றை மிகச் சுருக்கமாகக் கூறுதலே பொதுவிதி கண்டலாகும். இவ்வாறு கண்ட பொதுவிதியை மீண்டும் படிப்பில் கையாண்டு பயிற்சி பெறுதலே விதியை செயற்படுத்தலாகும். இந்த ஐந்து விதிகளும் உலகியலடிப்படையில் அமைந்தவை. இவ்வாறு ஹெர்பார்ட் உளவியலில் தாம் கண்டறிந்த உண்மைகளை வகுப்பறையில் கையாளுதவற்கு வகை செய்தார்.

குழந்தைகள் கல்வி: ஹெர்பார்டிற்குப் பிறகு கல்வி உலகில் தலைசிறந்து திகழ்ந்தவர் ஃபிரைடரிக் ஃபிராபெல். இவரும் இவரை அடுத்து வந்த மாண்டிசாரி அம்மையாரும் குழந்தைகளின் கல்வி முறைகளில் பெருந் தொண்டாற்றினர். இவர்கள் குழந்தைகளை வளரும் செடிகளாகவே கருதினர். இயற்கை அன்னையும் மனிதனும் ஒன்றாக இருந்துகொண்டு இறைவனுடைய திருவுளத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று நம்பினார் ஃபிராபெல். எனவே, குழந்தைகளின் ஆற்றல்கள் மலர்ச்சியடைதல் இறைவன் திருவுளக் குறிப்புப்படி நிறைவேறுவதால், இவை தவறாகா என்று நம்பினார். எனவே, இயற்கையையொட்டிக் கற்பித்தல் நடை பெறல் வேண்டும் என்பது இவர் கருத்தாகும். இவர் கருத்துப்படி பள்ளி என்பது குழந்தைகளின் பூங்கா; பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகள் பூங்காவில் வளரும் செடிகள்; குழந்தைகளைக் கண்காணிக்கும் ஆசிரியர் செடிகளைப் பாதுகாக்கும் தோட்டக்காரன். எனவே, கற்கும் குழந்தைகள் தாமாகச் செயற்பட்டும், கருத்துகளைத் தாமாக வெளியிட்டும் வளர்ச்சி எய்த வேண்டும் என்பது ஃபிராபெலின்