பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

77



ஆனால் உயர் இன உயிரியாகிய மனிதனின் நோக்கம் வேறு. மனிதன் சூழ்நிலையோடு பொருத்தப்பாடு அடைவது மூன்று விதங்களினால். ஒன்று தன் நடத்தையையும் மனப்பான்மைகளையும் சூழ்நிலைக் கேற்றவாறு மாற்றிக் கொள்வது; மற்றொன்று, தன் நடத்தைக்கேற்றவாறு சூழ்நிலையை மாற்றி அமைத்துக் கொள்வது; பிறிதொன்று இரண்டும் கலந்த நிலையில் அமைத்துக் கொள்வது. குழந்தைப் பருவத்திலும் குமரப் பருவத்திலும் இப்பொருத்தப்பாடு தீவிரமாக நடைபெறுகின்றது. மனிதனின் நோக்கம் வாழ்க்கை மட்டுமன்று; உண்மை, நேர்மை, அழகு போன்றவை நிறைந்த நல்வாழ்க்கையாகும் அது. மனிதன் இயற்பியல் சூழ்நிலைக்கும் சமூகச் சூழ்நிலைக்கும் இணங்க மாறுபாடுகளை அடைகின்றான்; ஒரளவு ஒருவாறு சூழ்நிலைகளையும் மாற்றி அமைக்கின்றான். இங்கும் கொடுத்து வாங்கும் அநுபவத்தினால் அறிவு உண்டாகின்றது; திறமை ஏற்படுகின்றது; உள்ளக்கிளர்ச்சி. மாற்றங்களும் நடைபெறுகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவுகளே அநுபவம் என்பதும். கற்றல் என்பதும் விரிந்த பார்வையில் கல்வி என்பது இந்தப் பொருத்தபாடேயாகும்.

கல்வி உலகில் சூழ்நிலை என்பது மிக விரிந்த பொருளையுடையது. இயற்பியல் சூழ்நிலை நாம் அறிந்ததுதான். நாம் வசிக்கும் வீடு, தோட்டம், வயல், ஊர், நாடு முதலியவை; இவை தவிர வானம், சூரியன், சந்திரன், இதர கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. இவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். சமூகச் சூழ்நிலை என்பது மிக விரிந்தது; ஆழ்ந்த பொருளையுடையது. இதனை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். முதலாவது, அறிவுசார்ந்த சூழ்நிலை. இதில் கணிதம், அறிவியல், பொருளியல், பொறியியல், மருத்துவ இயல் போன்ற துறைகள் அடங்கும். இரண்டாவது, உணர்வுச் சூழ்நிலை, இதில் இலக்கியம், இசை, ஓவியம் முதலியவை அடங்கும். மூன்றாவது, ஒழுக்கச் சூழ்நிலை. இதில் நீதி நூல்கள், சட்ட நூல்கள் முதலியவை அடங்கும். இவற்றையெல்லாம் சமூகம் வருங்காலச் சந்ததியினருக்குச் சேர்த்து வைத்துள்ள அறிவுக் கருவூலமாகும். இவை யாவும் நூல்கள் வடிவிலும், தளவாடங்கள் வடிவிலும் சேமித்து வைக்கப்பெற்றுள்ளன. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தம்விருப்பத்திற்கேற்ப, இயல்பிற்கேற்ப, அறிவு