பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82



தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


மும் உள்ளே ஆழ்ந்துள்ளது. எங்ஙனம் புறத்தே புலனாகும் பனிக்கட்டி மலைக்கு நீரின் அகத்தே ஆழ்ந்துள்ள பகுதி அடிப்படையாக உள்ளதோ, அங்ஙனமே நனவிலியுளமும் நனவு உள்ளத்திற்கு அடிப்படையாக உள்ளது. புறத்தே தோன்றும் பனிக்கட்டி மலையின் பகுதியும், நீரில் ஆழ்ந்துகிடக்கும் அதன் அடிப்பகுதியும் ஒரே மலையின் இருபகுதிகள் என்பது வெளிப்படை. அங்ஙனமே நனவு உளமும் நனவிலியுளமும் ஒரே உளத்தின் இருபகுதிகளாகும் என்பது கருதத் தக்கது.

இந்தப் பல்வேறு மனநிலைகளின் இயல்பினைச் சில எடுத்துக் காட்டுகளால் விளக்கினால் நன்கு தெளிவாகும். திருமணம் ஆகாத நண்பர் ஒருவர் மயிலாப்பூரில் வசித்து வருகின்றார். அவருடைய சமையற்காரப் பையன் கிருஷ்ணன் நாயர் என்ற பெயரினை உடையவன். அவர் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று தம் பதவிஉயர்வின்நிமித்தம்கிருஷ்ணாம்பேட்டையில் வசித்துவரும் தம் மேல் அலுவலர் ஒருவரைக் காணத் திட்டம் இடுகின்றார். ஏதோ காரணத்தால் அன்று கிருஷ்ணன் நாயர் கடுஞ் சுரத்தால் பீடிக்கப்பெற்று அதிகாலையில் நண்பருக்குக் காஃபி போட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை. 'என்ன செய்வான் பாவம்?' என்கின்றது அவரது நனவு உள்ளம். ஆனால் அவரது நனவிலி உள்ளமோ உணவிலே ஈடுபட்டுக் 'காஃபியின்றி அலைய விட்டானே பாவி!' என அவர் அறியாதபடி வெறுத்து நிற்கின்றது. நனவுநிலையின் அறிவுப் போக்கிற்கும் நனவிலி நிலையின் அறிவில் போக்கிற்கும் இத்தகைய வேற்றுமை உண்டு.

மேல்நிலை அலுவலரைக் காணச் செல்லும் வழியில் -லஸ் மூலையில்-இராயர் ஒருவர் நடத்தி வரும் சிற்றுண்டி விடுதியில் காஃபி அருந்திவிட்டுச் செல்லுகின்றார் நண்பர். அப்போது கறந்த பாலும் சுற்று முன்னர் இறக்கிய கஷாயமும் சேர்ந்து அவர் அருந்திய காஃபியின் தரத்தை உயர்த்திவிடுகின்றன. நண்பரின் நனவிலி உளம் இராயரை வாழ்த்துகின்றது. பருகிய இன்பம் அதற்கன்றோ தெரியும்? நனவு உளமோ 'காசுக்கு வந்த காஃபி' என இராயரைப்பற்றி எண்ணாமலே போகின்றது, குதிரை வண்டியில் ஏறும் பொழுது 'எங்கு போகவேண்டும்?' என்று வினவுகின்றான் வண்டியோட்டி. 'இராயப்பேட்டைக்கு