பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


மலைகள் போல் எழுந்தவை-இருந்த இடம் தெரியாமல் ஆவியாய்க் காற்றில் கலந்து அத்வைதமாகி விட்டன.

"இஃது ஒரு மாயவித்தையோ? எவ்வளவு பெரிய வெப்பம்? எல்லாவற்றையும் உருக்கி ஆவியாக்கும் பெருஞ்சூடு! கதிரவன் வயிற்றிலும் விண்மீன்களிலும் இப்படிப் பொருள்கள் பெருஞ்சூட்டில் ஆவியாய்க் கிடக்கும் என்பர். அப்படித்தான் இந்த மண்ணுலகிலேயே ஹிரோஷிமா சூரியன் வயிறாக மாறியது. நூறு கோடி ஆதவர்கள் எதிர்வந்தது போன்ற பேரொளி! நினைக்கவும் முடியாத நெருக்கடி-காற்றின் அமுக்கம்! இறுக்கம்! உலகமே தலைமீது விழுந்தது போன்ற காற்றின் தாக்குதல்! இதில் அனைத்தும் துாள் பறந்தது" -இப்படிப் பத்திரிகைகள் கதறி அலறின.

மூன்று நாட்கள் கழிகின்றன. நாகாஸ்கி என்ற மற்றோர் ஜப்பான் நகர் மீது புளுட்டோனியம் அணுகுண்டு வீசப் பெறுகின்றது. அந்நகரமும் அழிவுறுகின்றது.

முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே
இன்னை யிட்டதீ ஜப்பான் நகர்களிலே

என்று பாட வேண்டும் போல் தோன்றுகின்றது. நாகாஸ்கியும் உருத் தெரியாத வெட்ட வெளியாக மாறுகின்றது. நீர் கொதிப்பது 100°C, நாகாஸ்கியில் எழுந்த சூடோ எத்தனையோ ஆயிரம் சுழி காட்டுத் தீபோல் எங்கும் சுழற்றியடிக்கின்றது. மின்சார ஆற்றல் வீசுகின்ற வீச்சில் எண்ணற்றவர் மடிகின்றனர். பலபல கண்காண, ஒளிகள் அலைஅலையாக வீசுகின்றன. புறத்தே அழிவோ மாறுபாடோ ஒன்றும் தெரியாமலேயே, உள்ளுக்குள்ளேயே பல உறுப்புகள் மக்கள் அறியாமலேயே சிதைந்தொழிகின்றன. எத்தனை மாற்றங்கள்! இவற்றிற்கு மந்திரமும் இல்லை; மருந்தும் இல்லை. பல தலை முறைகளுக்கு உடலமைப்பில் - உறுப்புகளில்- சிற்சில மாறுதல்கள் (Genetic transformations) எழக் கூடும் என உயிரியலறிஞர்கள் அஞ்சுகின்றனர். திடீர் எனப் பல திசைகளையும் முட்டித் தாக்கும் மிகப் பெரிய சண்ட மாறுதம் பொருள்களை இறுக்கி நொறுக்குகின்றது; தீயாகத் தேய்க்கின்றது; காற்றோ