பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

89


 காற்றாய் மேலே கிளம்புகின்றது. எல்லாம் பெருமெளனத்தின் இடையேதான் நடைபெறுகின்றன!

இந்தக் கோர உருத்திர தாண்டவத்திற்குப் பிறகு ஜப்பான் உடனே அடி பணிகின்றது. உலகமெல்லாம் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுகின்றது. நாமும்,

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற!
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற!

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற!
ஒன்றும் பெருமிகை உந்தீபற!

தச்சு விடுத்தலும் தாமடி இட்டலும்
அச்சு முறிந்தது என்று உந்தீபற!
அழிந்தன முப்புரம் உந்தீபற.1

என்று மணிவாசகப் பெருமானின் திருவாசகங்களைப் பாடவேண்டும் என்று நினைக்கின்றோம்.

'ஒர் அணு என்ன செய்கின்றது?’ என்று நடுநடுங்கி வாயைப் பிளக்கின்றது உலகம்.

கேட்டாயோ தோழி கிறிசெய்தவாறு ஒருவன்
காட்டாதனவெல்லாம் காட்டிக்
.........
காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவம்காட்டிக்
கேளாதன வெல்லாம் கேட்பித்து2

என்ற பாடலை இங்கும் பாடலாம். கற்பகாலம் எல்லாம் வருந்திச் செய்ய வேண்டிய அழிவினையும் ஆக்கத்தினையும் இமைப்பொழுதிலே செய்து முடித்துவிடுகின்றது அணுவாற்றல்! திரிபுரத்தை எரித்த காலத்தில் எல்லா ஆயுதங்களும் தயாராக இருந்தும் சிவபெருமான் ஒன்றனையும் வீசி எறியாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே சிரித்தாராம்! திரிபுரம் எரிந்தனவாம். அணுகுண்டும் இவ்வாறே போருக்குச் சாதாரணமாக வேண்டிய


1. திருவா. திருவுந்தியார்-1, 2, 3

2. ஷ. திருவம்மானை - 6