பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


வெடிகுண்டுகளையும் விமானங்களையும் கப்பல்களையும் பிற ஆயுதங்களையும் தொலைவில் விட்டொழித்து-பின்னுக்குத் தள்ளி-ஜப்பான் நகரங்களை அழித்தொழித்தது. ஜப்பானில் மூன்றாவது புரம் எரியவில்லை! இருபுரங்களே எரிந்தன!

[][][]

இங்கனம் அணுவின் ஆற்றலால் துன்பம்தான் விளையுமா? அழித்தல், எரித்தல், ஒழித்தல் போன்ற செயல்கள் தாம் அவை இயற்றக் கூடியனவா? மனித வர்க்கத்திற்கு நன்மைகளைச் செய்யுமா? என்பதே இன்றைய கேள்வி. அணு ஆற்றலால் விளையக் கூடிய தீமையைவிட நன்மைகள்தாம் அதிகம். இதனை விளக்குவதற்கு முன்னதாக ஒரு புராண வரலாற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். -

தாருகவனத்து முனிவர்கள் அபிசார யாகம் ஒன்றை இயற்றி அதில் தோன்றும் கொடிய பொருள்களைக் கொண்டு சிவபெருமானையே அழிக்க முயன்றனர். முதலில் அதிலிருந்து மதயானை எழுந்தது. அதனைச் சிவன் பால் ஏவினர். அப்பெருமான் அதனை அழித்து அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டு அடுத்து ஏவப்பெற்ற சிங்கத்தை அடக்கி அம்பிகைக்கு வாகனமாக்கிக் கொண்டனர். தொடர்ந்து எண்ணற்ற நஞ்சு கக்கும் பாம்புகள் கிளம்பின. அவற்றை யெல்லாம் அணிகலன்களாகத் தரித்துக்கொண்டு அரவாபரணரா னார் ஆலமுண்ட நீலகண்டர். காதை அடைக்கும் ஒலியைக் கிளப்பிக் கொண்டு உலகமெல்லாம் சுற்றி வந்த உடுக்கையை அடக்கித் தம் கையில் தரித்துக் கொண்டார். உலகையெல்லாம் அழிக்கவல்ல ஊழித் தீ போன்ற ஒரு கொடிய தீயை ஒரு கிண்ணத்தில் அடக்கித் தம் கையில் தரித்துக் கொண்டார். இன்னும் பல தீய பொருள்களையெல்லாம் அடக்கியாண்டு. அவற்றை நன்மை பயக்கும் பொருள்களாக மாற்றியமைத்துக் கொண்டார். இந்த வரலாற்றால் தீமை பயக்கும் பொருள்களை யெல்லாம் நன்மை பயக்குவனவாக மாற்றியமைத்துக் கொண்ட செய்தி கிடைக்கின்றது. அங்ங்னமே அறிவியலறிஞர்கள் சோதனைச் சாலையில் கண்டறிந்த அணுகுண்டின் அற்புத ஆற்றலை மக்கள் வாழ்வின் பொருட்டுப் பயன்படுத்திக். கொள்ளும் வழிகளைக் கண்டனர்; அவற்றில் வெற்றியையும் கண்ட்னர். இந்த நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு