பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


அப்போது"கருப்பு தாரமிழந்தவன்” (Block widower) என்ற தலைப்பில் மர்மக் கதைகளில் தொடர் ஒன்றை பத்து ஆண்டுகளாக எழுதி வந்தேன்".

"நான் படுக்கையிலிருந்து விழித்து எழுந்ததும் கனவில் கண்ட நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு "சிவப்புத் தலை” (The Read head) என்ற பெயரில் ஒரு கதையை எழுதினேன். அது எல்லரி குவீனின்“மர்மக்கதை" இதழில் 1984 அக்டோபரில் வெளிவந்தது" எனத் தான் கனவு மூலம், கதையும் கதைக் கருவும் பெற்ற பட்டறிவை விளக்கிக் கூறுகிறார் ஐசக் அசிமோவ்.

சில சமயங்களில் ஐசக் அசிமோவின் நண்பர்கள் ஏதேனும் ஒரு கருத்தையோ அல்லது ஒரு சம்பவத்தையோ கூறி, அதன் அடிப்படையில் அறிவியல் புனைகதை எழுதச் சொல்வதும் உண்டு. இத்தகைய தூண்டுதல்களும் மறைமுக மாகவும் நேரிடையாகவும் விடுக்கப்படும் சவால்களும் இவரை முனைப்புடன் சிந்திக்கத் தூண்டி, செயல்படச் செய்ததும் உண்டு. அத்தகைய சம்பவ மொன்றை ஐசக் அசி மோவே கூறுகிறார் கேட்போம்.

1941 மார்ச் 17இல் 'அதிசய அறிவியல் புனைகதை (Astounding Science Fiction) எனும் ஏட்டின் ஆசிரியர் ஜான் கேம்பல் என்பவர் ரால்ஃப் வால்டேர் எமர்சன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் பகுதியை என்னிடம் கொடுத்தார். அதில்"ஆயிரம் ஆண்டுகளில் ஓரிரவு மட்டும் விண்மீன்கள் வானில் தோன்றி னால் அதைப் பார்த்து மனிதன் எவ்வாறு அதிசயிப்பான்? 'கடவுள் நகர்'பற்றிய நினைவைப் பல தலைமுறைகளுக்கு எவ்வாறு பாதுகாத்து வைப்பான்?” என்று அந்த மேற்கோள் வாசகம் அமைந்திருந்தது.

“இதை வைத்து ஒரு கதை எழுத முடியுமா?” எனக் கேட்ட கேம்பல் தொடர்ந்து அசிமோவிடம் அந்தக்