பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


“பூமியிலிருந்துதூக்கியெறியப்பட்ட துண்டுதான் நிலா என்று ஒரு விஞ்ஞான முடிவு உண்டு” எனக் கூறுகிறான். இதைக் கேட்டு மேலும் தெளிவு பெறுகிற வகையில் தமிழ் ரோஜா,

“எப்படி?”

என வினவுகிறாள்.

இதை விளக்கமாகக் கூறக் கிடைத்த வாய்ப்பாகக் கருதிய கலைவண்ணன்,பூமிப்பந்தி லிருந்து நிலவுலகம் பிரிந்து சென்று எவ்வாறு தனிக்கோளாக மாறியது என்ற விவரங்களை.

"பூமி தோன்றி அதன் எரிமலைக் குழம்புகள் ஆறத் தொடங்கிய அந்த ஆதிநாளில் - சூரிய ஏற்றவற்றத்தால் ஐந்நூறு ஆண்டுகள் வளர்ந்த ஒரு பேரலை பூமியிலிருந்து பிய்ந்து விண்வெளியில் வீசப்பட்டது, சில பெளதிக விதிகளுக்குட்பட்டுத் தூக்கியெறியப்பட்ட துண்டு ஒரு சொந்தப் பாதை போட்டுச் சுற்ற, ஆரம்பித்தது அதுதான் நிலா.. என விளக்க முற்பட்டபோது,

“ஆச்சரியம். ஆனால் ஆதாரம்?

எனத்தமிழ்ரோஜாஆர்வமிகுதியால் கேட்கிறாள்.அவளது கேள்வியின் நியாயத்தை உணர்ந்த கலைவண்ணன் அதற்கான ஆதாரங்களை அடுக்கடுக்காகக் கூற முற்படுகிறான்.

"இன்னும் பசிபிக் கடலில் அந்தப் பள்ளமிருக்கிறது, அந்தப் பள்ளத்திலிருக்கும் பசால்ட் என்னும் எரிமலைக் குழம்புப் பாறையும் நிலாப் பாறையும் ஒரே ஜாதி