பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177


னான இருந்து, இன, மதக் கலவரத்தால் தன் குடும்பத்தவர் களை இழந்து அநாதையாக சாக் நாடு சென்றவர். பரத்நாட்டின்மீது கொண்டிருந்த பழி வாங்கும் உணர்வு இச்சமயத்தில் விஸ்ரூப மெடுக்க, எப்படியாவது பரத் நாட்டின் அணுவிசை ஏவுகணை கட்டமைப்புப் பணியாளர்களுடன் கலந்து, அணுவிசை ராக்கெட் மாபெரும் வெடிகுண்டு களுடன் விண்ணோக்கிச் செல்லும்போது விண்கல்லுக்கு நேராகச் செல்லா மல் பாதை தவறிச் செல்லுமாறு செய்ய வேண்டும் அல்லது அதில் பொருத்தப்பட்டுள்ள மாபெரும் வெடிகுண்டுகள் விண்கல் மீது மோதி வெடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இவ்விரண்டில் ஏதாவதொன்றைத் திறம்படச் செய்து,பரத் நாட்டின் திட்டத்தைத் தோல்வியடையச் செய்வதன் வாயிலாக பரத் நாட்டைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த, மோதி சலாமுக்குத் துணையாக இயங்க நியமிக்கப்பட்ட, சலா முக்கு நேரடி அறிமுகமில்லாத பானர்ஜி எனும் விஞ்ஞானியை பாதி வழியில் மடக்கிச் சிறைபிடித்து மோதி, தன்னையே பானர்ஜி என அறிமுகப்படுத்திக் கொண்டு சலாமுடன் பணியாற்றத்தொடங்கு கிறார். மிகத் திறமையாக ஆள் மாறாட்டத்தை மோதி அரங்கேற்று கிறார்.

இச்சம்பவக் கோர்வையின் மூல மாக அரசியல்,பொருளாதாரக் காரணங்களோடு தனிப்பட்ட விரோத,குரோதக் காரணங்களும் அறிவியலோடுபின்னிப்பிணைய, அதன் வளர்ச்சிப்பாதையில் எப்படியெல்லாம் மேடுபள்ளங்கள் ஏற்பட ஏதுவாகின்றன என்பதைப் பல வகையிலும் வாசகர் கட்கு உணர்த்த முற்படுகிறார்ஆசிரியர். சாக் மற்றும் பரத் நாட்டின் தலைவிதியை இவ்விரு நாடுகளி டையே ஏற்பட்ட இன மத.மொழிக் கலவரங்கள் எவ்வாறு மாற்றி, திருத்தி நிர்ணயிக்க முயல் கின்றன என்ற தகவல்களை யெல்லாம் உள்ளமுருகக் கூறி உணர்த்துகிறார்.இதன் மூலம்