பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

198

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

யர்கள் முனைந்து செயல்பட்டால் காலத்தில் தேவையை நிறைவு செய்வதோடு, படைப்பிலக்கியப் பொற்காலத் தையும் தோற்றுவித்த பெருமைக்குரியவர்களாவர் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

அறிவியல் புனைகதைப் படைப்புகள் பெருமளவில் வெளிவர, படைப்பாசிரியர்கட்கு மட்டுமே பொறுப்புண்டு எனக் கூறி நழுவிவிட முடியாது. இதற்கான கடமைப் பொறுப்பு நூல் வெளியீட்டாளர், இதழாளர், அரசுத் துறை யினர், பொதுநல அமைப்பினர், வாசகர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் உண்டு என்பதை எக்காரணம் கொண்டும் யாரும் மறந்துவிடக் கூடாது.

அறிவியல் படைப்பிலக்கிய ஆசிரியனை அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இதழா ளர்கள் இப்படைப்புகளைத் தங்கள் பருவ இதழ்களில் வெளியிடுவதன்மூலம் படைப்பாசிரியனை ஊக்குவிப்ப தோடு, படிக்கும் வாசகர்கள் இவ்வகை இலக்கியப் படைப் புகளை விரும்பி ஏற்கும் மனநிலையையும் படிப்பார்வத் தையும் தூண்டி வளர்க்க முற்பட வேண்டும்.

இதற்காக அவ்வப்போது பரிசுத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். இதன்மூலம் திறம்பட்ட அறிவியல் புனைகதைப் படைப்புகள் உருவாக வழியேற்படுவதோடு அதிக அளவில் அறிவியல் படைப்பிலக்கியங்களும் படைப்பிலக்கிய ஆசிரியர்களும் உருவாக வாய்ப்பேற்படும் என்பது திண்ணம்.

தமிழ் வளர்ச்சித்துறை போன்ற அரசுத் துறைகள் பல்வேறு வகையான இலக்கியப் படைப்புகளுக்கு பரிசளிப்பது போன்றே அறிவியல் சிறுகதை, புதினம், கவிதைப்