பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


என் அருமை நண்பர் பேராசிரியர் அறிவியல் முனைவர் ப.க. பொன்னுசாமியின் ஒரே மைந்தன் நாவரசு. அந்தக் கொடுமையை நினைக்கும்போது, உடம்பெல்லாம் வாயாக அலற வேண்டும்போல் தோன்றுகிறது; மூச்சுத் திணறுகிறது.

அறிவியல் முனைவர் ஒருவரின் மறைந்த மகனுக்கு நண்பர் முஸ்தபா அறிவியல் தொடர்பான இந்த நூலைக் காணிக்கையாக்கி இருப்பது ஒரு வகையில் பொருத்தமே.

திரு. மணவை முஸ்தபாவுக்கு இன்னும் பல பணிகள் காத்திருக்கின்றன. அவை அவரால் மட்டுமே செய்யக்கூடிய பணிகள்.


திருச்சிரப்பள்ளி - 620 003. அன்புடன்
நாள் : 31.3.97 எழில் முதல்வன்