பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



வியல் கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் உண்டாகும் போதே அறிவியலின் பயன்பாடு முழுமையடைவதாயமையும். இதற்கு அறிவியல் அறிவும் உணர்வும் சிந்தனையும் பொங்கிப் பொழிய வேண்டும். அறிவியல் பூர்வமான சிந்தனை அறிவியல் கண்ணோட்டத்திற்கு அடிப்படையாகும்.

அறிவியல் கண்ணோட்டம் என்றால் என்ன?

தாங்கள் பெற்ற ஓரளவு அறிவியல் அறிவைக் கொண்டு, அதன் அடிப்படையில் அனுமானமாக ஒன்றைக் கணித்தறிய முற்படுவது அறிவியல் கண்ணோட்டமாகும். இதில் வெறும் கற்பனையான அனுமானத்திற்கு இடம் இல்லை. அறிவியல் உண்மையை அடியொற்றிய அனுமா னத்திற்கே இடம் உண்டு.

சான்றாக, பாட்டுக்கொரு புலவனாக வாழ்ந்த அமர கவி சுப்பிரமணிய பாரதியார் ஒரளவு அறிவியல் அறிவு பெற்றவர். அந்த அறிவியலின் அடிப்படையில் எதனையும் அணுகும் போக்கு மிக்கவர். அதனால் தான் அவரால் விஞ்ஞானக் கவிஞராகவும் விளங்க முடிந்தது.

அவர் காலத்தில் செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்ப டவில்லை. அக்கண்டுபிடிப்பிற்கான தொடக்க முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படாத கால கட்டத்தில் வாழ்ந்தவர் பாரதியார்.

அதுவரை தொலைநோக்காடி மூலம் நிலவின் மேற்பரப்புக் கண்டிறியப் பட்டிருந்ததேயொழிய, அப்பரப்பின் அமைப்புத் தன்மைகள் ஏதும் அறியப்படவில்லை. அதனால் நிலவு ஒரு கோள் என்பதும் கதிரவனின் ஒளியைப் பெற்று அதனைப் பிரதிபலிப்பாதால், அவ்வொளி நிலா வொளியாகப் பூமிக்குள் கிடைக்கிறது என்பதும்தான்