பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



கலை காக்கும் அறிவியல்

இன்று கலைப்பணியில் ஆற்றல்மீகு அருங்கருவியாக அறிவியல் அமைந்து, பண்டையக்கலைப் பொருட்களின் நுட்பங்களைப் பகுப்பாயவும், போலிக் கலைப் பொருட்களின் முகமூடியைக் கிழித்தெறியவும் மண்ணிற்குள்ளும் ஆழ்கடனிலடியிலும் புதையுண்டு கிடக்கும் புதை பொருட்களின் காலத்தைக் கணிக்கவும் அவற்றின் மூலவடிவை மீண்டும் காணவும் அறிவியல் நுட்பங்கள் இன்று அருந்துணையாய் அமைந்துவருகின்றன.

முன்பெல்லாம் அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ள அரும்பொருட்களின் தோற்றம், காலம், செய்முறை முதலியவற்றை வெறும் கண்களால் பார்த்துமதிப்பிட்ட நிலையிருந்தது. இம்முறையில் அதிகமான தவறுகள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகவும் இருந்துவந்தது. ஆனால், இன்று அந்நிலை அடியோடு மாறிவிட்டது. காலம் முதலா னவற்றைத் துல்லியமாகக் கணித்தறிய அறிவியல் வழியமைத்துள்ளது. பழம்பொருட்களின் காலம், மூலத்தோற்றம், செய்முறை போன்றவற்றை மின் காந்த அலைகளைக் கொண்டு கணித்து மதிப்பிட்டறியும் அறிவியல் முறை நெடுநாட்களுக்கு முன்பே வழக்கத்திற்கு வந்துவிட்டது.

அதன் பின்னர், 'இன்ஃபிரா ரெட்' எனும் அகச்சிவப்புக் கதிர்கள் கண்டறியப்பட்டன. இந்தக் கதிர் வீச்சு அலைகள் ஒளியைவிட ஊடுருவக் கூடியது. இதன் மூலம் மேலும் துல்லியமாகத் தகவல்களைக் கணித்தறியும் முறை செயல்பாட்டுக்கு வந்தது.

அகச்சிவப்புக் கதிர்கள் மரத்தையும் கலைப்பொருட்களின் மேல் போர்வைகளாகிய படுதாக்களையும் ஊடுருவிச் சென்று படைப்புக்காலத்தைக் காட்டுவதோடு அமையாது,</poem>