பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

47



திறன், கற்பனை வளத்திற்கேற்ப வடிவு பெறும். இத்தகைய அனுமான உணர்வின் அடிப்படையில் புதிய புதிய உலகங்கள் மனத்தளவில் உருவாக்கப்படும். தான் விரும்பும் அத்தகைய வாழ்க்கை ஏதோ ஒரு உலகில் தன்னையொத்த மனிதர்கள் பேராற்றலோடு பெரு வாழ்வு வாழ்வதாக அனு மானிப்பது அவனுக்குரிய இனிய கற்பனையாகும்.

இவ்வாறு ஒவ்வொருவரும் வெவ்வேறு உலகங்களில் மனித இயல்புகளோடும் இயல்புமீறிய அதீர ஆற்றலோடும் வாழ்வதாகக் கருதிய மனித அனுமானங்களின் கூட்டுத் தொகுப்பே உலகெங்கும் வழங்கி வரும் புராணச் சம்பவங்கள்.புராணப்பாத்திரங்கள் பெரும்பாலும் மனிதச் சாயலில், ஆனால் அவனைவிட எல்லா வகையிலும் மேம்பட்டவர்களாக வாழ்வதாகச்‌ சித்தரிக்கப் படுகின்றனர். வெவ்வேறு உலகங்களான கோள்களில் வாழும் அவர்களிடையே பிற உயிரினங்கள் வாழும் அந்தக் கோளங்களிடையே அவற்றில் வாழ்பவர்களிடையே ஒரு வகையான தொலைவிலுணர் திறன் இருக்கும்.அவர்களிடையே வானவெளிப்பயணங்கள் அடிக்கடி இருக்கும். உலகியல் முறையில் அவர்களிடையே நட்பும் பகையும் மாறி மாறி ஏற்படும்.

இதே கற்பனைக் கதைகளைச் சம்பவக் கோர்வைகளை வெறும் அனுமான அடிப்படையில் கற்பனையாகக் காட்டாமல் அறிவியல் அடிப்படையில் இதில் வேண்டிய அளவு ஆங்காங்கே மாற்றங்கள் செய்து காரண காரியத்துடன் சம்பவங்களைச் சித்தரித்துக் காட்டும்போது அவை அறிவியல் புனைகதைகளாக உருமாற்றம் பெறுகின்றன. அவற்றை அறிவோரின் சிந்தனையைத் தூண்டவும் முடி கிறது.

அறிவியலுக்கும் கற்பனைக்குமுள்ள வேறுபாடு

சாதாரணமாக அறிவியல் புனைகதைகளில் அதீதக் கற் பனை இடம் பெறுவதுண்டு. ஆயினும், அக்கற்பனையை