பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

66 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்
 ஆங்கில மொழியில் உருவாக்கப்படும் அறிவியல் இலக்கியப் படைப்புகள் வாசகர்களிடையே எத்தகைய விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை'கேலக்ஸிசைன்ஸ்ஃபிக்ஷன்' எனும் இதழைத் தொடங்கிய ஹோரஸ் எனும் இதழாசிரியர்,
 “ஓர் ஊழியின் ஆவல்கள், நம்பிக்கைகள், அச்சங்கள், மன உலைவுகள் ஆகியவற்றை அறிவியல் புனைகதைகளைப்

போல் வேறெதுவும் வெளிப்படுத்துவதில்லை; அதன் குறைபாடுகளையும் அறுதியிட்டுக் கூறுவதில்லை"எனக்கூறியுள்ளது சிந்திக்கத்தக்கதாகும்.

 ஆங்கில மொழியில் அறிவியல் புனைகதைகளின் கருப்பொருள்கள் நாளடைவில் விரிந்து கொண்டே செல்லலாயின. அறிவியல் கதைகள் பெரும்பாலும் விண்வெளிப் பயணங்களையே கருவாகக் கொண்டு படைக்கப்பட்டன. நாளடைவில் விண்வெளி இசை நாடகங்களாகப் பரிணமிக்கவும் அவை தவறவில்லை.
 மேலும், இவ்வறிவியல் கதைகள் காலப்பயணம், விண்வெளிக் குடியேற்றம், பெரும் அழிவுகள், பல்வகைக் கற்பளை உலகுகள்,ஊக முன்னறிவிப்புகள், அறிவியல் உண்மைகள் பற்றிய விளக்கங்கள் அடங்கிய இலக்கிய வகைகளாக அமையலாயின.
 இனி,அறிவியல் புனைகதைகள் எத்தகைய நோக்கில் அணுகப்பட்டது, இப்போது எத்தகைய கண்ணோட்டத்தோடு அணுகப்பட்டு வருகிறது என்பதை ஆய்ந்தறிவது கடந்தகால அறிவியல் இலக்கிய வளர்ச்சிப் போக்கைப் புரிந்து கொள்வதோடு இன்றைய நிலையையும் நாளைய எதிர்பார்ப்பையும் உரிய முறையில் சிந்தித்துத் தெளிய ஏதுவாகும்.