பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

79


எனவே, அறிவியல் உண்மைகளை கற்பனைக் கல வையோடு சொல்ல முற்படும்போது வரன்முறையான போக்குகளை கடைப்பிடிக்காது போனால், அஃது கருதிய தற்கு மாறான விளைவைத் தருவது தவிர்க்க முடியாததாகி விடும்.

வேற்றுக் கிரகங்களில் நம்மைப்போல் மனிதர்களும் பிற உயிரினங்களும் இருக்கின்றனவா என்ற ஆய்வு மா பெரும் தொடர்கதையாகும். ஆனால், அறிவியலின் பேரால் புனைகதை எழுதுவோர் பறக்கும் தட்டுபோன்ற சாதனத் தின் வாயிலாக பிற கிரகங்களிலிருந்து மனிதர்கள் பூமிக்கு வருவதுபோல் கதையளப்பார், அதோடமையாது மனித குணங்களைக் கொண்ட விநோத உருவமைப்போடு கூடிய வர்களாக வர்ணிக்கப்படுவர். நம் பண்டைய புராணங்களில் வரும் அதிசய உருவமைப்புக் கொண்டவர்களைக் காட்டி லும் விநோதமாக அவர்தம் உருவ அமைப்பும் பேச்சும் இருக்கும். இவர்கள் அதீத சக்திபடைத்தவர்களாகவும் சித்த ரிக்கப்படுவர். இதனால் இவற்றைப் படிக்கும் வாசகர்கள் அறிவியல் உண்மைநிலைக்கு மறுதலாக புதியதோர் கற்ப னையுலகில் வாழ்பவர்களாக மாறிவிட நேர்கின்றது. சுருங்கச் சொன்னால் இதுவும் ஒருவகையான புராணக் கதைப் படைப்பாகவே உருவாக நேர்கின்றது. இஃது ஒரு வகையில் அறிவியல் புனைகதைக்கு மாறான நிலை என்று கூடக் கூறலாம்.

அறிவியலின் பெயரால் அதீதக் கற்பனை கொண்ட புனைகதைகளாக, இன்னும் சொல்லப் போனால் புதிய புரா ணங்களை உருவாக்காமல், அறிவியல் அறிவை உண்மை யில் அடிப்படையில் பொது மக்களுக்குப் புகட்டும் வழி முறைகள் பற்றி முனைப்புடன் சிந்திக்க வேண்டுவது அவசியம்.