பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

மணவை முஸ்தபா 83

 டீடாலஸ், லியோனார்டோ டா வின்சி முன்னூறு ஆண்டுகள் கழித்து 'ஜூல்ஸ் வெர்ன்' என்ற பெயரில் தோன்றினார் என்றே கூறவேண்டும். இவர் சிந்தனைத் திறமும் கற்பனை வளமும் படைப்பாற்றலும் வாய்க்கப்பெற்ற எழுத்தாளர் மேதை.பரந்த அறிவியல் அறிவுள்ள கலைஞர். டீடால்ஸ் முதல்டாவின்சி வரையுள்ள படைப்பாளர்களின் கற்பனைத் திறனோடு அவர்கள் சாதித்துச் சென்ற அறிவியல் போக்கிலானசாதனைகளை

யெல்லாம் நன்கு அறிந்து உணர்ந்து தெளிந்தவர். அவர்களின் அடிச்சுவட்டில் தன் படைப்பாற்றிலை அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் வெளிப்படுத்த முனைந்தார். அதன் விளைவாக அரிய அறிவியல் புனைகதைகள் உருவாக வழியேற்பட்டது.

இயற்கை மர்மமும் கற்பனைப் படைப்புகளும்

 சில சமயம் இயற்கைப் பொருட்களில் காணும் மர்மச் சூழல் அதீதக் கற்பனைக்கும் அதன் வழியாகப் புராண உரு வாக்கத்துக்கும் காரணமாயமைந்து விடுவதும் உண்டு. காலப் போக்கில் அறிவியல் காரணங்கள் புலப்படும் போது உண்மை உணர்ந்து தெளிவதும் உண்டு.

காந்தமலை தந்த கற்பனைப் புராணங்கள்

 இன்றைய பார்சிலோனாவின் அருகில் ஒரு காந்தமலை இருந்தது. அதில் இருந்த காந்தக் கவர்ச்சியினால் அருகாகச் செல்லும் கப்பல்கள் பெரும் பாதிப்புக்காளாயின. இரும்புப் பட்டயமோ இரும்பு ஆணியோ கப்பலில் இருந்தால் அவை கடலோரமாக இருந்த காந்த மலையால் ஈர்க்கப்பட்டுவிடும். மீண்டும் நகர்த்த முடியாநிலை. இச்சூழலை அடிப்படையாகக் கொண்ட புராண நிகழ்ச்சிகள் பல மக்களால் உருவாக்கப்பட்டன. ஈர்ப்புக்கு காரணம் தெரியாத நிலையில் அதை ஒரு அதீத சக்தி இயக்கமாகக் கருதி,