பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

96 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

அறுவை மருத்துவ ஆராய்ச்சியில் பெரும் ஈடுபாட்டை ஏற்ப டுத்தியது. இன்று உலகெங்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெருமளவில் நடைபெறுவது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

 இதயமாற்று அறுவை மருத்துவத்தில் உலகின் மாபெரும் முன்னோடியாக கிறிஸ்டியன் பர்னார்டு விளங்கு வதற்கு அடியமைத்துக் கொடுத்த பெருமை அறிவியல் புனைகதை ஆசிரியர் அலெக்ஸாண்டர் பியலியோவையே சாரும்.
 இதே ஆசிரியர் 1926இல் "வாழ்வுமில்லை சாவுமில்லை"(Neither Life nor Death)என்ற புனைகதையில் இறக்காமல் அதே சமயத்தில் உணர்ச்சியற்றுக் கிடக்கும் தன்மையைக் கற்பனையாகக் கூறியிருந்தார். அன்று உணர்ச்சியின்மை தரும் மயக்க மருந்துகள் எதுவும் கண்டறியாத காலமாகும். அன்றைய நிலையில் அவர் அறிவியல் பூர்வமாகக் கூறியிருந்த கருத்து பல ஆண்டுகட்குப் பின்னர் உணர் விழப்பி மயக்க மருந்து மூலம் ஒருவரை இறக்காமலும் அதே சமயம் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் வைத்திருக்க முடியும் என்பதை மருத்துவ உலகம் செயல்பூர்வமாக நடை முறைப்படுத்திவருவது கண்கூடு.
 மற்றொரு ரஷ்ய எழுத்தாளரான யூரிடோல்குசின் என்பவர், தான் எழுதிய"தெய்வீக நிகழ்ச்சிகளைத் தூண்டுபவர் (Generator of Miracles) என்ற கதையில் இறந்து விட்டார் என்ற நிலையில் உள்ள சடலத்திற்கு மீண்டும் உயி ரூட்ட முடியும் என்ற கருத்தை விளக்கியிருந்தார். அக்கருத்தின் அடிப்படையில் இன்று இதயம் நின்று போன நிலையில் உள்ள சடலத்தின் இதயத்திற்கு அதிர்வேற்படுத்துவதன் மூலம் மீண்டும் இயங்கச் செய்யப்படுகிறது. முன்பெல்லாம் நெஞ்சின் மேல் பகுதியை கைகளால் ஓங்கி