பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

உள்ளத்தை அடக்கியாண்டு நல்வழியின் கண் திருப்ப இயலாது மனம் போன வழியே தறிகெட்டுத் திரிபவன் பாவியாவான். மயக்கும் மொழி பேசும் ஒழுக்கமிலா மங் கையர் வழி நடப்போன் வஞ்சகனாவான். இறைவன் விதித்த மறைவழி ஐந்து நேரமும் தொழுது இறைவணக் கம் புரியாதவன் தோவியாவான். மறதிக்குட்பட்டவன் மூடனாவான். மனித உள்ளத்தை மென்மைப்படுத்திஇறை யடியுணர்வுடன் ஒன்றச் செய்யும் மெய்ஞ்ஞான உணர் வோ அறிவோ இல்லாதவன் நிர்மூடனாவான் தான் எனும் அகந்தைக்கு ஆளாகும் ஆணவ உணர்வுள்ள வன் தனக்கு மட்டுமல்லாது பிறருக்கும் தீங்குண்டாக்கும் வண்டனா வான் கண்முன்னே தெளிவாகத் தெரிபவைகளைக் கூடக் காண மறுப்பவன் கண் குருடனாவான் எப்படிச்சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வில்லாதவனாய் எப்படியாவது பெரும் பொருள் குவிக்க வேண்டுமென பணம் திரட்டும் வெறியோடு இரவுபகலாய்ச் சிந்தித்து பொருள் சேர்க்கும் வெறியுடன் கவலையே உருவாய் வாழ்பவன் அழுகல் மனிதனாவன். இத்தகைய தீய பண்புகள் அனைத்தும் தன் னிடம் நிறைந்திருப்பதாயும் இத்திய-குணங்களைத் தன் னிடமிருந்து அகற்றி தன்னை மன்னித்து ஆட்கொள்ளு மாறு இறைவனை இருகரமேந்தித் துதிக்கிறார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அகிலமனைத்தையும் படைத்துக் காத்துப் மரிபாலிப்பவன் அவனே' எனும பொருள் பொதிந்த அரபிச் சொற்றொடரான 'அல்ஹம்துலில் லாஹிறப்பில் ஆலமீன்' எனும் வாக்கியத்தை அப்படியே இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார். மேலும 'ஆதி ரகு மானியே’’ என அல்லாஹவை விளித்துப் பாடுவதன் மூலம் அனைத்திற்கு முதலாயமைந்தவனும் அன்புடை யோனுமாக அமைந்திருக்கும் வல்ல அல்லாஹ் மீது தான் கொண்டுள்ள பக்திவுணர்வை வெளிப்படுததுவதோடு , அவற்றை படிப்போர் நெஞ்சத்திலும் பக்குவமாய் படியும் வண்ணம் பாடுகிறார்.