பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106



இந்நூலில் பெருமானார் மீது பாடப்பட்டுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிள் இறுதி அடியும் "ஹாமிதிறசூல் நபியே’’ என முடிகிறது. இப்பாடல்களின் மூலம் நபி பெருமானாரிடம் குரையிரந்து அண்ணலாரை அருள்புரிய வேண்டுவதன் வாயிலாக நபிகள் நாயகத்தின் புகழ் பேசப்படுகிறது. அண்ணலாரின வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அவர் தம் பெருமையும் குணச்சிறப்பும் புகழ்ந்தோதப் படுகின்றன.

பெருமானாரின் இஸ்லாமிய நெறி முறைகளை ஏற்க விரும்பாத மக்கா குறைஷிகளால் பெரிதும் துன்புறுத்தப் பட்ட அண்ணலாரும் அவர்தம் ஆருயிர்த் தோழர் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் மதினா மாநகருக்குத் தப்பிச் செல்லும்போது, தேடி வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க எண்ணி வழியில் இருந்த குகையொன்றில் ஒளிந்திருந்தனர். அங்கே தங்கியிருந்தபோது கொடிய அரவ மொன்று அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைத் தீண்டி விட்டது. பாம்பு கடித்தவிடத்தில் அண்ணலார் தம் அன்புக் கரத்தால் தடவி விட விஷம் மறைந்தது. அந்நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டும் முறையில்.

'அமலிற் சிறந்த அபூபக்கரின்
அடியில் அரவம் கடித்தவிடம்
தமது கரத்தால் சலவாத்தைச்
சாற்றி நீககும் பார்த்திபரே
விமல நிதியே கண்மணியே
வினவும் அடியேன் முகம்பார்த்துக்
கமலப் பதம் தந்தருள்புரியும்
ஹாமீ முகம்மது ரசூலே’’

என இம்முனாஜாத்துப் பாடல் அமைந்துள்ளது.

அல்லாஹ் மீதும் பெருமானார் மீதும் பாடப்பட்ட முனாஜாத்துப்பாடல்களுக்கு அடுத்த நிலையில் அதிகமான