பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

மடக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகும். சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்

"சிறப்புறும் நபிமார்க் கெல்லாம்
      செய்யிதா யுதித்தென்னானாம்
சிறப்புறு மிறகு லுல்லா திவ்விய
      வாக்குப் போலும்
சிதப்புறும் தீனோர்க் அன்புசெயும் நபி
      கிளிறில் யாசும்
சிறப்புறஞ் சரணமுத்தி செயம்பெறு
      நாலெந் நாளோ"

இதன் ஆசிரியர் பெயர் ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் பெயர் அசன் அலி என்றும் தன் தநதை வழிப் பாட்டனாரின் பெயர் கந்தப் புலவர் என்றும் அவர் வகுதையைச் சேர்ந்தவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மற்ற முனாஜாத்துகளில் காணாத புதுமையாக, இம் முனாஜாத்துப் பாடல்களைப் படிப்போரை வாழி வாழி என வாழ்த்தும் போக்கையும் காணலாம.

"மலர்மக ளுவகை தாங்கி வருகலை
                     மகளிர் சேர்ந்து
உலவிய வகுதையின்சீ ருடையவன்
                    பரன்வாழ் கந்தப்
புலவர் பேரன்யா னென்று புகழசன்
                      அலிமு னாஜாத்து
இலகிய அமுதப் பாவை இயம்புபவர்
                      வாழி ஆமீன்."

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பட்ட பக்திப் பனுயல்களாகிய முனாஜாத்துப் பாடல்களில் தமிழ் யாப்பமைதி பெரிதும் பேணப்பட்டாலும் ஆங்காங்கே அரபி மொழி இணைவுக்கேற்ப சிறுசிறு மாற்றங்களைச்