பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

"ஐந்து படைப்போரை அழகாய் படித்தோரும்
சிந்தையுற்று கேட்போரும் சிறப்பாகவே வாழி"

என வாழ்த்துவது இவர்தம் உயர்பண்பை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது.

ஐந்து படைப்போரில் முதல் போராக அமைவது இபுனியன் படைப்போராகும். குறாசான் எனும் நாட்டை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் இபுனியன் என்பான், தன் நாட்டைத் தீய வழியில் செலுத்தி, மக்களைக் கொடுமைக்குள்ளாக்கி வந்தான். இவனது தவறான ஆட்சியில் மக்கள் அடைந்த பெருந்துயருக்கு அளவேயில்லை இந்நிலை கண்டுணர்ந்த பெருமானார் அவர்கள் அவனுக்கு நற்புத்தி புகட்டி, நல்வழிகாட்ட காலித் எனும் அறிஞரைத் துாதனுப்பினார். காலிதின் ஆனற அறிவுரைகளைக் கேட்ட கொடுங்கோலன் இபுனியன் காலிதை ஏளனம் செய்ததோடு தன்னை நல்லாற்றுப்படுத்தத் தூதனுப்பிய பெருமானைரயும் ஏசிப் பேசினான். மதீனா மீது படையெடுத்து பெருமானரை அழிப்பதாகவும் வஞ்சினம் கூறினான். இதனை அறிந்த அண்ணலாரும் அவர்தம் உற்ற தோழர்களான அலியார், அபூபக்கர் ; உமர், உதுமான் ஆகியோரும் மற்றவர்களும் கவலை கொண்டனர். கொடுங்கோலன் படையெடுத்தால் அதனைச் சமாளிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினர். இடையே இபுனியனுக்கு நல்லறிவு புகட்ட இறுதி வாய்ப்பாக மீண்டும் தூதனுப்பப்பட்டது. பெருமானாரின சமாதானத்தை ஏற்காததோடு முஸ்லிம்கள் மீது படையெடுக்கவும் ஆயத்தமானான். இந்நிலைவுணர்ந்த அண்ணலாரும், அலியார் தலைமையில் இபுனியனை எதிர்க்கப் படையனுப்புகிறார். இருபடைகளும் பொருதுகின்றன. ஏராளமான பேர் போரில் மடிகின்றனர். இறுதி நிலையிலாவது இபுனியின் திருந்தி நல்வழிப்பட மாட்டானா என எண்ணிய அலியார் மீண்டும் சமாதானத்தூது