பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

எண்ணி முரசொலித்தால் அவருதவி கிடைக்குமென எண்னிய வடோச்சி இறைவனை எண்ணி முரசறைந்தான். அப்போது பேரித்தங்கனி பறித்துகf கொண்டிருந்த அலியார் செவியில் முரசொலி விழவே. வடோச்சிக்கு ஏற் பட்ட இன்னலையும். அவல நிலையையும் உணர்நfது, அவனுக்கு உதவ விழைந்தார். தோல்வியும் துன்பமும் தொடருமோ என மனக்கலக்கமுற்றுத் துவண்டு போயிருந்த வடோச்சி முன் மாவீரர் அலியார் இருப்பதைக் கண்ட வடோச்சி அளவிலா ஊக்கமும் உற்சாகமும் கொண்டான் துன்பத்தின் உச்சியில் துணை புரிய அலியாரை அனுப்பிய அல்லாஹ்வின் பேரருளைப் புகழ்ந்தான் : அப்போது வடோச்சி பெற்ற மனநிலையைக் கூற வந்த ஆசிரியர்.

'வாடும் பயிரதற்கு மழைவந்த வாறதுபோற்
தேடும் பொருள் வலியச் சிக்கினது போற்றினமும்
கண் குருடானவர் கண் பெற்ற வாறதுபோல்
உணடுடுக்க ஒன்றுமில்லாது உற்ற வெளியோர்கள்
கண்டெடுத்த நற்புதையல் கைசேர்ந்த வாறது
போல்
பிள்ளையில்லா மானிடர்க்குப் பிள்ளை வந்த
வாறது போல்
உயிர்போய் இருந்தார் உயிர்பெற்ற வாரதுபோல்
கைர்பெற்றுக் கொள்ளக் கத்தனலி இங்குவந்தார்’

எனக் கூறுவதன் மூலம் அலியார் வருகையால் வடோச்சி பெற்ற பெரு மகிழ்வைப் புலப்படுத்துகிறார்.

வடோச்சிக்கு உதவும் வகையில் போரிடும் அலியாரின் வீரத்தின் முன் இந்திராயனும் அவன் படைவீரரும் திணறினர். அலியாரின் வாள் வீச்சுக்கு படைத் தலைவர்கள் பலியாயினர். படையினர் மாண்டு மடிந்தனர். செய்வகை தெரியாது போர்க்களத்தே திகைத்து நின்ற இந்திராயனின் நிலை இரங்கத்தக்கதாக இருந்தது. அந்நிலையிலும் சாந்தி வழி போற்றும் அலியார் இந்திராயன் நல்வழிப்