பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

காலையும் கையையும் இழந்த நான் கத்தினேன்; கதறினேன். ஆனால், என்னைக் காப்பார் யாருமில்லை. எல்லோரும் எனனை வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை

அப்போது சென்னைப் பட்டிணத்திலிருந்து செஞ்சிக்கு வந்திருந்த மாமு நயினா மரைக்காயர் என்பவர் என்னை பார்த்தார். இவர் வள்ளல் செய்தக்காதியின் தம்பி. நான் படும் வேதனையைக் கண்டு மனமிரங்கினார். பரிவுடன் என்னிடம் பேசினார். நான் ஆறுதல் தேடி நடந்தவற்றையெல்லாம் கூறினேன். அவர் என் மீது அன்பும் பரிவும் கொண்டார்.

ஆயிரம் பொன் கையில் கொடுத்து மருத்துவம் செய்து கொள்ள உதவினார் காயங்கள் ஆறியவுடன் கீழக்கரை வந்து சந்திக்குமாறும் பணித்துச் சென்றார்.

மருத்துவச் செலவு போக மீதமிருந்த தொகைக்குக் குதிரையொன்றை வாங்கி துணைக்கு ஒரு ஆளையும் அமர்த்திக் கொண்டு, பல்வேறு ஊர்களைக் கடந்து கீழ்க் கரையை அடைந்தேன்.

கீழக்கரையில் தன் பண்டகசாலையில் மாமுநெய்னா மரைக்காயருடன் இருத்த வள்ளல் செய்தக்காதியின் காலில் விழுந்து வணங்கி நின்றேன். என் நிலைமையை உணர்ந்து தெளிந்த வள்ளல் பெருந்தகை ஆயிரம் பொன்னைக் சையில் கொடுத்து. தனது குருவும் ஞான வள்ளலுமான சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் சென்று அறிவுரை பெற்று, அவர் காட்டும் வழியில் சென்று உய்தி பெறுமாறு கூறி அனுப்பினார்.

ஞானச் செல்வர் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் சென்று கலிமாச்சொல்லி முஸ்லிமானேன். என் வாழ்க்கை