பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்துது வெள்ளாட்டியிடம் ஆறுதல் தேட, அவள் தன்னை சுல்தான் ஹாரூன் ரஷீதிடம் ஒப்படைத்து அதற்குப் பகரமாக பதினாயிரம் பொற்காசுகள் பெற்று நந்நிலை எய்துமாறு கூறுகிறாள். அவளது ஆலோசனைக் கிணங்க பதுறுஸ்ஸமான் அவளை சுல்தான் ஹாரூன் ரஷீதிடம் அழைதுச் செல்ல. அவளது ஆபார அறிவையும் திறமையையும் தான் வைக்கும் சோதனையில் நிரூபித்தால் கேட்ட பொன்னைக் கொடுப்பதாகவும் அச்சோதனையில் அவள் தோல்வியுற்றால் அவளை வெறுமனே அழைத்துச் செல்ல வேண்டுமெனப் பணிக்க அந்நிபந்தனைக்கு பதிறுஸ்ஸமானும் தவத்துது வெள்ளாட்டியும் ஒப்பினர்.

தவத்துது வெள்ளாட்டியின அறிவாற்றலையும் மார்க்க ஞானச் சிறப்பையும் சோதிக்க விரும்பி நான்கு பேரறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கொண்டு அவளைச் சோதிக்க ஏற்பாடு செய்தார். அந்நான்கு உலமாக்கள் கேட்ட 669 கேள்விகளுக்கும் உரிய தக்க பதில்களை அளிக்க அவளது பரந்துபட்ட இஸ்லாமிய மார்க்க ஞானச் செறிவையும் சொல் திறனையும் பாராட்டி அவன் கேட்ட பதினாயிரம் பொன்னைத் தந்ததோடு, தவத்துது வெள்ளாட்டியையும் பதுறுஸ்ஸமானுக்கே பரிசாக வழங்கி 'நீரும்முடைய வெள்ளாட்டியைக் கூட்டிக் கொள்ளும். அவளுக்கு நீர் விலை கூறிய பதினாயிரம் தங்கக் காசும் உமக்கு ஹதியா" வென்று சொல்லிக் கொடுத்து, அல்லாஹுதஆலா உங்களுக்குப் பறக்கத்துச் செய்வானாகவுமென்று துவாச் செய்தார். பின்னர் தவத்துது வெள்ளாட்டியும் பதினாயிரம் பொன் பரிசு பெற்ற பதுறுஸ்ஸமானும் மண்வினை நிகழ்த்தி மகிழ்வோடு வாழ்ந்தனர்" என நூல் முடிகிறது.

வெள்ளாட்டி மசலா நூல் இஸ்லாமிய நெறி முறைகள் பெரும்பாலானவற்றை திருக்குர்ஆன் ,ஹதீது அடிப்படை யிலும் நபிமார்களின் வாழ்க்கை வழியேயும் அவர்தம் குண-