பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மட்டுமே தவிர்க்க முடியா நிலையில் அரபி, பெர்சியச் சொற்களைக் காண முடிகிறது.

காலத்தால் மிக முற்பட்டது என்பதனாலும் மிக அதிகமான அளவில் மசலாக்கள் இடம் பெற்றுள்ளது என்ற காரணத்தினாலும் ஆயிர மசலா இம்மூன்றினுள்ளும் முதன்மை நிலைபெறுகிறது. உரைநடையில் அமைந்ததாயினும் இஸ்லாமிய மார்க்கச் செய்திகளை மட்டுமே சிறப்பாக விளக்கிக் கூறும் நூல் என்ற வகையில் வெள்ளாட்டி மசலா தனித்துவமுடையதாக அமைந்துள்ளதெனலாம். மொழி நடையிலும் கருத்துணர்த்தும் பாங்கிலும் இலக்கியச் சுவையைப் பெரிதும் பெற்றிருக்கும் நூறு மசலா எளிய நடையில் அமைந்த இனிய இலக்கியப் படைப்பு என்ற சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

இஸ்லாமிய வரலாற்று அடிப்படையிலும் நபிமார்கள், இறைநேசச் செல்வர்களின் வாழ்க்கையின் முக்கியப் யகுதிகளைப் பின்னணியாகக் கொண்டும் கேள்வி-பதில் வடிவில் அமைந்திருப்பதாலும் நூலில் படைக்கப்பட்ட கதை மாந்தர்களில் பலர் கற்பனைப் பாத்திரங்களாக அமைந்தாலும் அவர்கள் இஸ்லாமிய நெறி அடிப்படையில் உயிரோட்டத்துடன் உலவி வருவதனாலும், இஸ்லாமிய நெறிகளைப் பற்றி மட்டும் பேசாது, அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளையும் தொட்டு விவாதிப்பதாலும், இந் நூற்கள் எழுதப்பட்ட காலத்தில் வழக்கிலிருந்த சாதாரணச் சொற்களே நூற்பாடல்களில் சரளமாகக் கையாளப்பட்டிருப்பதாலும் மக்களின் ரசனைக்கேற்ப பாடலாகவும் உரைநடையாகவும் இம்மசலா நூற்கள் அமைந்திருப்பதாலும இவை மக்களைப் பெரிதும் ஈர்த்து அவர்களிடையே மிகுந்த செல்வாக்கையும் வரவேற்பையும் பெற்றதில் வியப்பொன்றுமில்லை.