பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

தாங்கள் இறை வணக்கமில்லா நிலைக்குப் பெறப்போகும் நரக தண்டனையை எதிர்நோக்கி நிற்பாராயினர்.

ஆறாவதாக, பெண்கள் அணியொன்று இறைவன் முன் வந்து நிற்கும். இவர்களில் சிலர் மனத் தூய்மையற்ற வர்கள். மற்றும் சிலர் காம உணர்வு மிக்கோர். வேறு சிலர் பிள்ளைப் பேற்றைப் பெரிதும் பெற்றவர்ள். மேற் கூறிய பல்வேறுவகைபட்ட ஆசாபாசங்கட்கு ஆட்பட்டவர்களாய் இறைவணக்கம் புரியத் தவறியவர்கள். இறைச் சந்நிதி ஏகிய இப்பெண்களை நோக்கி அல்லாஹ் இறை வணக்கம் புரியத் தவறியதற்கான காரணததை வினவும் போது தாங்கள் இறைவன் அளித்த வாழ்க்கைப் பேறுகளையெல்லாம் முறறாக அனுபவிக்க முயன்றதால் இறைவனை தொழுதேதத நேரமில்வாது போயிறறு என்ற மறுமொழி கேட்கும் இறைவன், அவர்கள் முன்பாக ஹவ்வா, தாயாரைத் தோன்றச் செய்து தொழாத அப்பெண்மணிகளை நோக்கிக் கூறுவான்; நீங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய இன்பப் பேறுகளையெல்லாம் வாரி வழங்கினேன் அவற்றில் உழன்ற நீங்களோ பேற்றினை யீந்த வல்லோனையே பறந்து வழுத்தத் தவறி விட்டீர்கள். இன்பமின்றித் துன்பமில்லை எனற இனிய சூழலில் இறைநினைவு எழா தொழிந்தது அதே சமயத்தில் உங்கள் முன் நிற்கும் முதல் பெண்ணாகிய ஹவ்வாவுக்கு எத்தனையோ சோதனை ஏற்படுத்தப்பட்டன தொல்லைகள் தொடர்ந்தன எதிர் வந்த இன்னல்களை இன்முகத்தோடு ஏற்று வல்ல அல்லாஹ்வை நேரந்தவறாது வாழ்த்தி வணங்க என்றுமே தவறியதில்லை. துன்ப துயரங்களிடையேயும் தவறாது இறைவனைப் போற்றி வணங்கிய ஹவ்வாவின் முன் இன்பப்பேறுகளை முற்றாகப் பெற்றும், அதனை அளித்த அல்லாஹ்வை வணங்க மறந்து வீண்பொழுது போக்கிய பெண்களை முனிந்து எரி நரகில் இறைவன் எறிவான் என்பதை,