பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

சூஃபி என்பவன் ஒரு பயணியாகக் கருதப்படுகிருன். சூஃபித் துவம் ஆன்மாவின் துணிகரப் பயணம் ('கலூக்). பயணி சாலிக் எனப்படுவான அவனுக்கு வழிகாட்டியாக அமையும். குரு முர்ஷித், அல்லது "பீர்' எனப்படுவார். சூஃபி வழி காட்டியின் துணையோடு ஏழு நிலைகளைக் கடக்கிருன். இநநிலைகள் 'மகாமாத்” எனப்படும் முதல்நிலை மானுடநிலை- உபூதிய் யத்’-இந்நிலை பாவங்களுககாக வருந்தி ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதல். இரண்டாம் நிலை காதல்நிலை - இஷக். பொறி யின்பங்களேத் துறநது இறைக்காதலில் ஆழ்ந்துபோதல் இந் நிலையாம். மூனரும் நிலை த றவு நிலை- ஜுஹத்'. இது இறையைத் தவிர அனைததையும் துறத்தலாம். நான்காம் நிலை ஞானநிலை - மஅரிபத்’ , பரம்பொருளின் இயல்பு, பண்பு. செயல ஆகியவற்றைச சிந்திததுணர்தல் இந்நிலையாம். ஐந்தாம் நிலை பரவச நிலை-'வஜத்'; பரம்பொருளைத் தியானித்து மனக் கிளாச்சியடைந்து தன்னை மறந்து பரமான்மாவோடு ஒன்றுதல். ஆருவது உணமை நிலை-ஹகீகத்'; இதயம் உணமையான பரம் பொருள் தன்மையால விளககமுறுதல்; விளக்கமுற்றபின் இறையைச் சார்தல். ஏழாம் நிலை ஒன்று நிலை-வஸ்ல் -எனப் டும். இது பரம்பொருளே நேருக்கு நேராகக் கண்டுணர்தலாம். இவ்வேழு நிலைகளையும் கடந்தவன் இறுதியில் தான் எனும் நன்மையை முற்றிலும் அழித்துக் கொண்டு பரமான்மாவோடு அததுவிதமாவான்: இந்நிலை ஃபளு எனப்படும்.

ஏழு நிலைகளில் மூனரும் நிலையாகிய "ஜூஹத் நிலை யுற்றவன் பக்கீர்’ எனப்படுவான். 'பக்ரு என்று அரபுச் சொல்லுக்கு வறுமை, இன்மை என்று பொருள். சூஃபித்துவத்தின் தலைமை ஊறருகக் கருதப்படும பெருமாளுர் முகம்மது (சல்) அவர்கள்,

'அல் பக்ரு பக்ரி வல பக்ரு மினனி’’

(வறுமை என் பெருமை: அவவறுமை என்னிடத்தது) எனக் கூறி யுள்ளார். இங்கு பக்ரு' எனற சொல் வெறும் வறுமையை மட்டும் குறிக்காமல் இனமை என்ற பொருளையும் குறிக்கும். அவவாறு பொருள கொள்ளுங்கால யான், எனது” என்ற இரணடுணாவும் அற நிருப்பது என பெருமை எனறும், தான் எனும் உணாவை முறறும அழிததுக்கொண்டு பரம்பொருளோடு ஒனறிவிட்டவன தான என்றும் அவர் குறிப்பது புலப்படும். எனவே 'பக்கீர்’ எனற சொல் மூனரும் நிலையாகிய "ஜூஹத்’ எனபதை மட்டுமே குறிக்காமல சூஃபி இறுதியில் அடையும் பரிபூரண நிலையாகிய ஃபன' என்பதையும் குறிக்கும். குஃபி