பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கலைச் சொற்களில் பக்கீர்’ என்பதும் ஃபானி' என்பதும் ஒரு பொருட்கிளவிகள் பரிபூரணமுற்ற சூஃபியை பக்கீர்’ என்றே அழைப்பார் குணங்குடியார். இத்தகைய பரிபூரண நிலையுற்ற சூஃபி என்பதை அவர் வாக்காலேயே உணரமுடிகிறது: முகியித்தீன் சதகத்தின் 82-வது பாடலில் அவர் தம்மை பக்கீறு என அழைத்துக் கொள்கிருர், ஃபன' எனும் நிலையிலிருந்து மீண்டு வநது பக்குவமுற்ருேர்க்கு ஞானத்தை உணர்த்தி வழி காட்டும் நிலைக்கு பகா என்று பெயர். இந்நிலையிலும் குணங் குடியார் இருநதிருக்கிருர் என்பதை,

'நிலையுறு சத்துச்சித் தாகந்த மாக நிறைபொருளைக் கலையுறு மாட்சியில தானுற்றுயாரையும் காட்டவல்லோன்'

என்ற அவருடைய சீடர் மகாவித்துவான் திருத்தணிகை சரவணப் பெருமாளேயரவர்கள் வாக்கால் அறியமுடிகிறது.

தரீ.கா

யோக, ாைன நெறிகளில் பல்வகை முறைகள் இருப்பது போனற சூஃபித்துவத் கிலும் பல முறைகள் உள. இம்முறைகள் அல்லது வழிகள் தரீஃகாக்கள் எனப்படும்.

'அல் துரு:கு இலல்லாஹி கா நு:பூஸி பணி ஆதமா’’

(மனித இதயங்கள் எத்தனையோ அத்தனை வழிகள் ஆண்டவனே அடைய) என்பது அரபுப் பழமொழி.

சூஃபித்துவத்தில் உள்ள பல தரீஃகாக்களுள் காதிரிய்யாத் தரீஃகா புகழபெற்றதாகும். இந்நெறியினை ஏற்படுத்தியவர் pலானில் பிறந்து பாக்தாதில் மறைந்த ஞானி அப்துல் காதிர் pலானி (கி. பி. 1677-1186) எனபவராவர். காதிரிய்யாத தரீஃகாவின மூலம் மற்றைய தரீஃகாக்கள் போன்றே பெருமாளுர் (சல்) அவர்களிடமிருந்து தொடங்குகிறது. பெருமானரின் பிரிய மருமகளுர் ஹஸ்ரத் அலி (ரலி) அவர் களால் இந்நெறி விளககமுற்று ஹசன பஸ்ரீ என்பவரால் நிலை நிறுத்தப்பட்டது. அவருடைய சீடர் ஹபீபுல் அஜமி ஹபீ பிய்யா' எனற நெறியை ஏற்படுத்தினர். இந்நெறியின் எட்டுப் பிரிவுகளுள் ஒன்று அபுல் பராஹ சர்சவளி (இ. 1055) என்பவரால் ஏற்படுத்தப்பட்ட 'சர்சவ்ளியா' என்ற நெறி இந்