பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi

குற்றமில்லாத ஒழுக்கத்தில்ை மூன்று காலத்துச் செய்திகளையும் தெளிவாக அறிந்து வாழ்க்கையை வெற்றியுடன் நடத்துபவர்கள் அறிவாகள்; அதாவது சித்தர்கள்-சூஃபிகள்.

"மறுவுஇல் செயதி மூவகைக் காலமும நெறியின ஆற்றிய அறிவன தேயன்'

என்பது தொல்காப்பியம்.

சூஃபிகள் நபிகள் நாயகத்தின் நேரடியான வழித்தோன்றல் கள் என்றும் சூஃபித்துவத்தைப் பொறுத்தவரையில் அதன் கொள்கைகள் பரவக் காரணமாயிருந்தவர்கள் நபிகள் நாயகத் தின் தோழர்கள் என்றும் சொல்கிருர்கள்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் சித்தர்களுக்கும். சூஃபி களுக்கும் வேற்றுமை இருப்பதாகத தெரியவில்லை. சித்தர்கள் ஆடம்பரங்களையும் ஆரவாரங்களையும் வெறுத்தார்கள. தாவர உணவு உண்டார்கள். சாதி சமயங்களைக் கடநது அனைவரையும நேசித்தார்கள். அவர்கள் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார்கள்.

சூஃபிகளும் இந்தக் கொள்கைக் கோட்பாட்டுடனதான் வாழந்திருக்கின்ருர்கள்.

தமிழ் நாட்டில் சித்தர்களும், சூஃபிகளும் தமிழில ஒரு புதிய ஞான இலக்கியத்தையே உருவாககியிருக்கிருர்கள்.

சூஃபிகளும், சித்தர்களும் தமிழ் மககளுக்காவே தங்கள் இலக்கியங்களைப படைத்திருக்கிரு.ாகள். தமிழ மக்கள் புரிந்து கொளளக்கூடிய எளிய இனிய சொற்களையே கையாண்டு அற்புத மான ஞானப் பாடல்களைப் பாடியிருக்கிருாக ள.

குணங்குடி மஸ்தான் சாகிபு, பீர்முகம்மது அப்பா போன்ற சூஃபிகள் அருமையான ஞானப்பாடல்களை அருளி இருக்கிருர்கள்.

பட்டினத்தார். தாயுமானவர், இராமலிங்க வள்ளலார் போனற சித்தர்களும் அற்புதமான மெய்ஞ்ஞானப் பாடல்களே இயற்றியிருக்கின்றனர்.

சித்தர் ஞானக் கோவையில் பீர்முகம்மது அப்பா அவர் களுடைய ஞானரத்தினக் குறவஞ்சி இடம் பெற்றிருக்கிறது. இதிலிருந்தே தமிழ் மக்களாகிய நாம் சித்தர்களையும் சூஃபிகளையும் ஒன்ருகவே பார்த்து வருகிருேம் என்பதைப் புரிந்துகொளளலாம்.