பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

103


எதிர்ப்பு ஆகவும் அமைந்துள்ள முத்துசாமியின் கட்டுரை 'பிரக்ஞை’ மூன்று இதழ்களில் வெளிவந்தது.

சி. மணியின் கவிதைகள் பற்றி ஞானக்கூத்தன் எழுதிய கட்டுரைக்குப் பதிலாக வெ. சாமிநாதன் பிரக்ஞையில் ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதற்கு அடுத்துத்தான் முத்துசாமி கட்டுரை வெளிவந்தது.

இவ்விரண்டு கட்டுரைகளுக்கும் பதிலாக ஞானக்கூத்தன் ஆறும் எழும் என்று எட்டுப் பக்கக் கட்டுரை ஒன்று எழுதினார்.

இந்த விவாதக் கட்டுரைகளில், கவிதை பற்றிய சிந்தனைகள், இலக்கிய விவகாரங்களைவிட சொந்தக் காழ்ப்புணர்ச்சிகளும், சதி வேலை-மறைமுகத் தாக்குதல் என்பன போன்ற குற்றச்சாட்டுகளும், அநாவசியமாகச் சிலரைப் பழித்துக் கூறலும் அதிகம் இடம் பெற்றன.

எனவே 'பிரக்ஞை' இவ்விஷயமாக நீண்ட தலையங்கம் ஒன்று எழுத நேரிட்டது.

“நிகழும் விவாதங்களிலும் சீரிய வளர்ச்சிக்கான சிந்தனையோ, சகிப்புத் தன்மையோ தெரிவதில்லை. அவை தெளிவு தராமல் பெருங் குழப்பத்திற்கே மறுபடி வித்திடுகின்றன. விவாதங்களில் அருவருப்பூட்டும் அளவு வெளிப்படுகிற காழ்ப்புணர்ச்சிகள் விவாதங்களில் இருக்கக் கூடிய ஆக்கபூர்வமான இயல்புகளை அழுத்திவிடுகின்றன.

விவாதங்களில் வெளிவரக் கூடிய காழ்ப்புணர்ச்சிகளை மனதில் கொள்ளாது தன் படைப்பும், தன் இலக்கிய ஆகிருதியும் தான் விமர்சிக்கப்படுகின்றன, தானல்ல என்பதை மனதில் வாங்கிக் கொண்டு, சுய விமர்சனத்தில் உண்மையைத் தேட முயலும் பொறுப்பு படைப்பாளிகள் பக்கமிருக்கிறது.

குறைகளைச் சுட்டிக் காட்டுவதில் கடுமையைக் கையாள வேண்டிய விமர்சகர்கள் ஒரு சூழலை உருவாக்குவதில் தங்களுக்கு இருக்கும் ஜாக்கிரதை உணர்வுடன், அக்கறையுடன் சகிப்புணர்ச்சியையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை இங்கு வலியுறுத்த வேண்டியதாகிறது.

பிரக்ஞையில் வெளியாகும் விவாதங்கள் எல்லாம் மேலே சொன்ன லட்சிய அமைப்பைக் கொண்டன என்றும் சொல்ல முடியாது.