பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

253


மாற்று ஏற்பாடு வேண்டும். தற்போதுள்ள அரசியல் சுழலில் சுற்றிக் கொண்டிருப்பதால் எத்தகையதொரு பலனும் ஏற்படப் போவதில்லை. சமுதாயத்தில் நமது முன்னோர்கள் நமக்களித்துள்ள நீதி, நேர்மை என்ற மூலதனம் எஞ்சியுள்ளது; அதைக் காக்க வேண்டும். கீழேயிருந்து புதிய பாரதத்தைத் தோற்றுவிக்கும் பணியைத் துவக்க வேண்டும். இதுவே உண்மையான நிர்மாணப் பணியாகும்.’

இன்றைய இந்தியாவின் நிலையைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு கட்டுரையின் முடிவுரை இது.

‘இன்று—

சத்தியத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தன்னம்பிக்கையற்றவர்களாக, சமுதாய நம்பிக்கையை இழந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆதலால், அவர்கள் புலம்புகின்றார்கள். வெறும் புலம்பலால் என்ன பயன் விளையும் ?

தூங்கிக் கிடக்கும் தனிமனித, சமுதாய, மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

உண்மையின் குரல் உரத்துக் கேட்க வேண்டும்.

உண்மையை நிலைநாட்டத் தொடர்ந்து போராடக் கூடிய மக்கள் சக்தியின் எழுச்சி வேண்டும்.

காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டி. அவருக்குச் சத்தியத்தின் வெற்றி, தானே கிடைக்கவில்லை. அதற்காக அவர் செய்த தியாகத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.

------------

சத்தியம் உயிரோட்டமுள்ளதாக, சத்தியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்று திரண்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். செயல்பட்டால்—

வாய்மை வெற்றி பெறக் காண்போம்‘

வாய்மையின் உயர்வை உபதேசிக்கும் ஒரு கட்டுரையின் இறுதிப் பகுதி இது.

‘காந்தியடிகளின் கருத்துக்கேற்ப யாதொரு வளர்ச்சித் திட்டம் வகுப்பினும் அதில் “தனக்கு” சுயநலத்துக்கு) இடமே இல்லை. இத்தகைய தன்னல உணர்வற்ற ஒரு மனிதனை மையமாக வைத்ததொரு