பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

261


கவனம் பிரகரித்தது. ஞானக்கூத்தன் எழுதிய ’பாரதியின் புதுக்கவிதை’ காஸ்யபன் எழுதிய ’நாவல் படிப்பது பற்றி’ (3 இதழ்களில் தொடர்ந்தது) ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவை.

இலக்கிய உணர்வு, அவ் உணர்ச்சி வெகுவாகப் பரவுதல் குறித்து கவனம் கருத்து செலுத்தியது. அதன் 5-ம் இ த ழ் தலையங்கக் குறிப்பு இது—

‘இலக்கியப் பத்திரிகைகளை வாசிப்பது மட்டுமின்றி அவற்றில் பிரசுரமாகும் படைப்புகளைக் குழுவாக விவாதித்து விமர்சனம் செய்வது, அதன் ஆசிரியர்களை நேரடியாகச் சந்திக்கச் செய்து விவரங்களில் தெளிவு காணுவது போன்றவை மிகவும் பயனுள்ளவையாகத் தோன்றுகிறது. இது இன்றைய இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செயல்படும்போது சரியாகவே தெரிய வருகிறது எனலாம். இலக்கியப் பத்திரிகைகளின் பணிகளுக்குத் தொடர்ச்சியான அடுத்த கட்ட முக்கிய பணியாக இதைக் கருதவும் முடியும்போது, இலக்கிய அமைப்புகளின் முக்கியம் இன்னும் கூடிப் போகிறது.’

1981 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கவனம், 1982 மார்ச்சில் வந்த ஏழாவது இதழுடன் நின்றுவிட்டது.

ஸ்வரம்— இக்கவிதை மாத இதழின் வளர்ச்சி சுவாரஸ்யமானது.

உதகமண்டலம், ராக்லேண்ட்ஸ், ஜே. எஸ். எஸ். கல்லூரி மாணவர் நந்தலாலா இலக்கிய வேகத்துடன் ஒரு இனிய முயற்சியில் ஈடுபட்டார். முதலில் சிலரது கவிதைகளை ஒரு இன்லண்ட் லெட்டர் தாளில் அச்சிட்டு இலவசமாக ரசிகர்களுக்கு அனுப்பினார்.

அவர் எனக்கு எழுதிய 14-2-82 கடிதம் அவருடைய இலக்கிய தாகத்தை வெளிப்படுத்தியது :

‘உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்பது தெரியவில்லை. என்னுடைய இந்தச் சின்ன முயற்சிக்கு வாழ்த்துச் சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையது.

காபி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு