பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இந்தியத் தத்துவங்கள் யாவும் வேதப்பாசுரங்களில் இருந்தும் அவற்றின் உயர் ஆன்மீக நெறியிலிருந்தும் பிழிந்தெடுக்கப்பட்டவை என்று கருதுவது மிகவும் தவறான நம்பிக்கையாகும். தத்துவங்கள் எந்த நாட்டிற்கு உரியவைகளாக இருந்தாலும் மனித இனத்தின் இயற்கையான வளர்ச்சியோடு இணைந்து வளர்பவை என்பதுதான் முற்றிலும், மெய்யானதும், எல்லோராலும் ஒப்புக்கொள்ளத்தக்கதும் ஆகும். ஏனெனில் தத்துவங்கள் விளங்காத காலத்திலும் மனித இனம் வாழ்ந்துள்ளது. எள்ளிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்து எடுத்ததுபோல வாழ்வியல் அனுபவங்களின் திரட்சியிலிருந்து கனிந்தவைதான் தத்துவங்கள். அப்படிப்பட்ட தத்துவங்கள்தான் நின்ற உண்மைகளாகும். இந்தியத் தத்துவங்கள் மதத்தைச் சார்ந்தும், மதத்தைச் சாராமலும் இருக்கின்றன என்பதையும் உளங்கொள்ளவேண்டும். இந்தியாவின் நெடிய வரலாற்றைப் படித்துணர்ந்த பண்பாளர்கள் ஓர் உண்மையைத் தெள்ளிதின் உணரலாம். அஃதாவது, பழம்பெரும் நாடான இப்பாரதநாட்டில் தத்துவ சகிப்புத் தன்மையும் சமயப் பொறையும் ஒருங்கே நிலவி வருகின்றன என்பதே அவ்வுண்மை. எந்தப் பொருளையும் காரண காரியத்தோடு விளக்குவதற்கு இந்தியாவில் தோன்றி வளர்ந்து பரவிய மதங்கள் தவறியதில்லை. எனவே பிறர் கருத்துகளையும் செவிமடுக்கும் பண்பு சகிப்புத்தன்மையின் இலக்கியமானது. எந்த ஒரு தனிமனிதனும், அமைப்பும் தன் கருத்துகளைக் கூறுவதற்கும் அதைப் பின்பற்றுவதற்கும் சமயங்கள் தடையாக நிற்கவில்லை. நின்றவையும் நிற்க இயலவில்லை. அதனால்தான் முரண் கோட்பாட்டாளர்கள், ஐயுறவுக்கொள்கையாளர், கடவுள் மறுப்புக் கொள்கையினர், பகுத்தறிவு நெறியினர், பொருள் முதல் வாதிகள். இன்பக்கோட்பாட்டினர், ஆகிய பலதரப்பட்ட தத்துவமுடையாரும் வாழ்வும் வளர்ச்சியும் பெற முடிந்தது. இந்தியத் தத்துவங்கள் கால அடிப்படையில் மூன்று கட்டங்களாகப் பிரித்து அறியப்பட்டு வருகின்றன. கி.மு. 1500 முதல் கி.மு.600 வரையிலுள்ள காலத்தில் தோன்றியவைகளை வேதகாலத் தத்துவங்கள் என்றும், கி.மு.600 முதல் கி.பி.200 வரையிலான நானூறு ஆண்டுக் காலங்களில் தோன்றிய காவியங்கள் கூறும் தத்துவங்கள் காவியக்காலத் தத்துவங்கள் என்றும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின் தற்போது வரையிலும் கூறப்பட்டும், பயிலப்பட்டும், போ மான தத்துவ