பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 இன்னொரு விதத்தில் ஓரறிவு உயிர், ஈரறிவு உயிர், மூவறிவு உயிர், நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என வரிசைப்படுத்துதலும் மரபாகும். புல்லும் மரமும் போல்வன ஓர் அறிவுடைய உயிரிகளாகும். இவை தொடு அறிவு மட்டுமே உடையன. நந்து, நத்தை, சங்கு, இப்பி போன்றவை தொடு அறிவுடன் சுவையறியும் வாய் உணர்வுடையவை. எனவே இரண்டு அறிவு உடையன. சிதலும் எறும்பும் போல்வன மூக்காலும் அறியும் ஆற்றல் உடையவை. எனவே மூன்று அறிவுடையன. நண்டும், தும்பியும், இவற்றோடு கண் உடையவை, பார்த்து அறிபவை. இவை நான்கு அறிவு உடையனவாகும். நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகளில் பல இவற்றுடன் செவிப்புலன் உடையவை. ஒலியைக் கேட்டுணருபவை ஐந்தறிவுடையவை. மெய், வாய், மூக்கு, கண், செவி என ஐம்புலன் அறிவொடு 'மனம்' உடையவன் மனிதன். இவன் ஆறு அறிவு உடைய விலங்கு. 'திருந்தியமைதல்' என்னும் பரிணாம வளர்ச்சிக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த விலங்கினம் மனிதன். பூமியில் முதன்முதலில் நீரில்தான் உயிர்கள் தோன்றின. அதன் தொடர் விளைவாக நிலத்தில் உயிர்கள் தோன்றின. பின்னர்ப் பறக்கும் உயிர்கள் தோன்றின. பரிணாம வளர்ச்சியின் படித்தரம் இவ்வாறே அமைந்திருக்கிறது. நிலம் வாழ் உயிரியான குரங்கு இனத்தின் ஒரு பிரிவிலிருந்து மனித இனம் தோன்றி நாடொறும் தன்புலன்களைப் புதுப்பித்து வளர்த்து இன்றைய நிலையை அடைந்து உள்ளது. ஒரு கண்ணோட்டத்தில் இயற்கையின் தோற்றத்தில் மனிதன் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றுக்கொள்கிறான். 'மனம்' என்ற புலன் அவனை மிகவும் அன்பான பிராணியாகவும் மாற்றி விடுகிறது. ‘மனம்'என்ற புலனே மனிதப் பிறவியில் மிகவும் சவாலானதாகும். மனம்தான் வாழ்க்கைப் போராட்டத்தின் கரு. உயிர்கள் நான்கு வகையில் தோன்றுகின்றன. விதையிலிருந்தும். முட்டையிலிருந்தும், கருப்பையிலிருந்தும், அழுக்கிலிருந்தும் உயிர்கள் தோன்றி வளர்கின்றன. வடமொழியாளர் இந்நான்கு வழிகளை நால்வகை 'யோனி' என்று கூறுவர். இந்நூற்றாண்டில் உயிரினங்களின் உறுப்புகளிலிருந்து செல்களைப் பிரித்தெடுத்துத் தக்க வகையில் ஊட்டமளித்து வளர்க்கின்ற குளோனிங்முறை ஆராயப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றது. இந்த