பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு வைத்துக்கொள்வதின் விளைவுதான் மனசாட்சி என்பது. அது ஒருவனுடைய முடிவான சொந்தக் கருத்து. அது எப்போதும் மாறிக்கொண்டே போகும். ஒருவனுடைய மனசாட்சி இன்னொருவனைக் காட்டிலும் வேறுபடும். அதிக அனுபவம் உண்டாகும்போது, மனசாட்சியும் வேறாகிவிடும். மனமானது பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. அப்பிரிவுகள் மேலும் பிரிக்கப்படுகின்றன. இப்படி மனமானது பரமாணு அல்லது தன்மாத்திரை வரையிலும் பிரிக்கப்படுகிறது. இந்தப்பரமாணு அல்லது தன்மாத்திரையே இந்திரியங்களையும் உணர்ச்சிகளையும் உண்டாக்கும் மாபெரும் சக்தியாய் விளங்குகிறது. மாறுதல், அசைவு (சேஷ்டை), அடங்குதல், தொழிலில் ஈடுபாடு. கொள்ளுதல், சக்தி, வாழ்க்கை, குணம், குறி, அறஉணர்வு போன்றவை மனத்தின் பண்புகளாகும். ஒருவன் மயக்க மருந்தினால் மயங்கியிருக்கும் போது மூளையிலுள்ள நுண்ணறைகளின் (செல்களின்) தொழில்கள் அம்மருந்தின் சக்தியால் தடைப்பட்டுக்கிடக்கின்றன. விழித்திருக்கும்போது மனத்தின் இடம் மூளையாகும். மயங்கியிருக்கும்போது மனம் தனது இருப்பிடத்தைத் தொண்டைக்கும். இருதயத்திற்கும் மத்தியில் அமைத்துக் கொள்கிறது. அப்போது ஒருவனுடைய கையையோ, காலையோ வெட்டினாலும் எந்த வேதனையும் ஏற்படுவதில்லை. மனமானது மூளையில் தங்கி உடம்பினிடம் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கும்போது மாத்திரம் மனிதன் வேதனையை உணருகிறான். ஒருவன் 'குளோரோபாரம்' போன்ற மயக்க மருந்தின் ஆதிக்கத்தில் இருக்கும் போது மனமானது பருவுடலிலிருந்து பிரிக்கப்பட்டுவிடுகிறது. தண்ணீர் எந்தப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்படுகிறதோ அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை எடுத்துக்கொள்ளும். அவ்விதமே மனமும் பொருள்களின் உருவத்தை எடுத்துக்கொள்கிறது. பின்பு வேறொரு பொருளுக்குப் பாய்ந்து அப்பொருளின் வடிவத்தைப் பூணுகிறது. இப்படியே அம்மனம் போய்க்கொண்டேயிருக்கிறது. இரயிலில் பயணம் செய்யும்போது சில சமயம் பாலத்தின்மீது செல்லும் பயணம் செய்பவன் "பாலம் இடிந்து விழுந்தால் நான் என் செய்வேன்? கண்டிப்பாய் நான் உடல் நசுங்கி இறந்துவிடுவேன்" என்று