பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அவன் மனம் எண்ணினால், உடனே அச்சத்தால் உடம்பு நடுங்குகிறது. இத்தகைய மனோராச்சியங்கள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. ஆதலின் மனோ வியாபாரங்களில் கற்பனா சக்தியே மிகுந்து காணப்படுகிறது. காலம் மனத்தின் மற்றுமொரு பிரகாரம். அதுதான் கலைசக்தி. பொருள்களைப் போல் அதுவும் ஒரு வெறுந்தோற்றமே. ஒருவனது மனம் ஆழ்ந்த சிந்தனையில் திளைத்திருக்கும்போது இரண்டு மணி நேரம்கூட இரண்டு நிமிடம் போல் தோன்றுகிறது. மனமானது பல எண்ணங்களால் அல்லல் பட்டுக்கொண்டு வருந்தும்போது இரண்டு நிமிடம் கூட இரண்டு மணி நேரமாக நீண்டு தோன்றுகின்றது. ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் இருக்கிறது. கனவில் ஆண்டுகளின் அனுபவங்கள் ஒரு சில நிமிடங்களில் முடிவடைந்து விடுகின்றன. மனத்தொழிலால் ஒரு கற்பம் கணப்பொழுதாகவும். ஒரு கணம் கற்பமாகவும் தோன்றுகிறது. பல மனம் அடங்கினால் மனத்தின் செயல்கள் யாவும் நின்றுவிடும். காலமும் கருத்தும் மறைந்து ஒழியும். காலம் மனத்தின் படைப்பு. சிந்தையும் மொழியும் விளக்க முடியாத தெய்வீக ஆற்றல் அல்லது மாயையின் பரிணாமமே மனம். காலத்தையும் மனத்தையும் கடந்தால் மரணமிலாப் பெருவாழ்வு அடையலாம். 'மரணமற்ற நிலை' என்பது இனிமையான எய்துதற்கரிய இறை அனுபவமாகும். "காலமும் கணக்கும் நீத்த காரணன்" இறைவன் என்பார் கம்பர். எல்லா நிறங்களும் கண்ணில் அடக்கம். எல்லா ஊறும் அல்லது தொடுகையும் தோலில் அடக்கம். காதில் ஓசை ஒலியெலாம் அடக்கம். எல்லா மணங்களும் (வாசனைகளும்) மூக்கில் அடக்கம். மேற்படி எல்லா உடற்கருவிகளும் மனத்தில் அடக்கம். எல்லா மனங்களும் 'ஓம்' அல்லது 'ஆத்மா' அல்லது எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒரு பரம்பொருளில் அடக்கம். மனோசக்தியே ஆத்ம சக்தியாக மாறும். தியானப் பயிற்சிகள் மனோ சக்தியை ஆத்மசக்தியாக மாற்றும். 'ஆத்ம சக்தி' என்பது சக்திக் களஞ்சியம் ஆகும். 'சக்திக் களஞ்சியம்' கையில் வைத்துக்கொண்டு உறுபொருளைக் கண்டு உணரவேண்டும். இல்லாவிட்டால் கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைந்தது போல் ஆகிவிடும்.