பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் அதிக வேகத்துடன் இடையறாது சுழல்கின்ற சக்கரம் போன்றது. ஒவ்வொரு சுற்றிலிருந்தும் புதிய புதிய எண்ணங்களைப் பிறப்பிக்கின்றது. இந்தச் சக்கரமானது சூக்குமப் பிராணனின் செல்வாக்கினால் சுற்றிக்கொண்டே யிருக்கிறது. எண்ணங்கள் உயிர் ஆற்றல் உடையவை. எண்ண, எண்ண எண்ணங்கள் பலமடைகின்றன. ஒரு தீய எண்ணமோ நல்ல எண்ணமோ மனத்தில் ஒரு முறை தோன்றினால், இந்த இரு எண்ணங்களும் மீண்டும் மனத்தில் தோன்றுதல் இயற்கை. ஓரினப் பறவைகள் கூட்டமாகக் கூடி வானிற்பறப்பது போல் எண்ணங்களும் ஒன்றாய்க் கூடுகின்றன. ஒரு தீய எண்ணம் தோன்றுமானால் ஓராயிரம் தீய எண்ணங்கள் ஒன்றுகூடிக் கீழே வீழ்த்தும். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். 53 குறள் 202) தீய எண்ணங்கள் தீயினும் கொடியவை. தோன்றிய இடத்தைப் பொசுக்குவதோடு அக்கம்பக்கத்தில் உள்ள பொருள்களையும் நொடிப்பொழுதில் தீ அழித்து நாசம் ஆக்குவதுபோல், தீய எண்ணங்கள் எண்ணியவனை மட்டுமல்லாது அவனுடன் அறிந்தும் அறியாமலும் தொடர்பு கொள்கிறவர்களையும் பிறப்பால் உறவானவர்களையும் அழித்துவிடும். உள்மனத்தில் நல்ல எண்ணங்கள் உண்டாகுமானால் எல்லா நல்ல எண்ணங்களும் ஒன்றுசேர்ந்து மேன்மேல் உயர்த்தும். நல்ல எண்ணம் என்பது நேர்மையான தூய்மையான எண்ணம் ஆகும். மனத்தூய்மையினால் செய்வினைத் தூய்மை பெறும். மனத்தூய்மை உடையவர் செயல்கள் செல்வத்தைக் கொடுக்கும் நல்லிணக்கத்தாரின் சேர்க்கையைப் பெற்றுத்தரும். மனத்தூய்மையினால் நன்மக்கள் பேறு உண்டாகும். நல்ல எண்ணங்கொண்டோர் உறவு கொள்ள விழைவர். நல்லோர் உறவு உண்டானால் நிறைவேற்ற முடியாத செயலே இல்லை. சான்றோர் உறவு உண்டாகும். சான்றோர் உறவு மேலும் செயற்கரிய செயல்களைச் செய்யும். வலிமையைத் தரும். நல்ல பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். ஒருவனுக்கு மனத்தூய்மையினால் மறுபிறவியிலும் இன்பம் உண்டாகும். மனநலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து குறள் 459)