பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 எண்ணங்களிலிருந்து கெட்ட செய்கைகளே உண்டாகின்றன. எண்ணங்கள் வேறு செயல்கள் வேறாக இருக்க முடியாது. 'விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது' என்பது பழமொழி. விதைப்பதுதான் விளையும். விளைவதுதான் அறுவடையாகும். பருத்தி விதைத்தால் பஞ்சுவரும். மாம்பிஞ்சு வராது. எனவே மனமும் எண்ணமும் செயலும் நல்லனவாக இருக்க வேண்டும். மனமும் உணவும் நல்ல மனம் அமைவதற்கு நல்ல உணவும் காரணமாகிறது. உணவு எப்படியோ அப்படியே மனமும். உணவின் சாரத்திலிருந்தும் அதன் நுட்பமான பகுதிகளில் இருந்தும் மனம் உண்டாக்கப்படுகிறது. உணவிற்கு மனத்தின் மீது செல்வாக்கு அதிகம். தூய்மையான உணவே நல்ல உணவு. புலால் உணவு நல்ல உணவு ஆகாது. அது புல்லர் தம் உணவாகும். நல்லோர் உணவு ஆகாது. இயற்கையில் விளையும் உணவே நல்ல உணவாகும். அதுவே தூய்மையான உண்டி ஆகும். தூய உண்டியால் மனத்தூய்மை உண்டாகும். மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே மணிமேகலை மணிமேகலை தன் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி அள்ளி இட்ட உண்டி தூய்மையான உணவாகும். அதனால்தான் சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக ஆயின. வன்னெஞ்சத்தை மென்னெஞ்சமாக்கும் மாயம் உடையது தூய உணவே. மரக்கறி உணவே முற்றிலும் தூய்மையானது. மரக்கறி உணவு என்பது செடிகொடிகளிலும் மரங்களிலும் பயிர் பச்சைகளிலிருந்தும் கிடைக்கும் உணவாகும். காய்கறிகள், கனிகள், கீரைகள், தானியங்கள், பருப்பு வகைகள் இவைகளே மரக்கறி உணவு எனப்படும். விலங்கின் ஊனிலிருந்து கறந்தாலும் பால் நல்ல உணவு என்றே பலரும் கருதுகிறார்கள். வேக வைக்காமல் உண்ணும் உணவு நெறியினர் பாலும் வேண்டாத உணவு என்று கூறுவர். தூய உண்டியால் மனத்தூய்மை உண்டாகும். இதனால் மனம், மொழி, ஆடை, அணிகலன்கள், வசிக்கும் அறைகள், சுற்றுப்புறம் ஆகியவைகளும் தூய்மையாக இருக்க வேண்டும். அமைதியான தூய்மையான மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்று தங்கும்போது