பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மனம் தூய்மையாக மாறுவதை எல்லோரும் உணர்ந்திருப்பார்கள். எனவேதான் உணவு முதலானவை தூய்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசப்படுகிறது. ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் சொற்பொழி வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெடுந்தூரம் பயணம் செய்பவர்களுக்கும். தூக்கம் கெடுமாறு உழைக்க வேண்டியிருப்போருக்கும், வண்டி ஓட்டுநர்களுக்கும் இரவில் காவல் புரிபவர்களுக்கும் என எல்லோருக்கும் நல்ல உணவு சைவ உணவே. உப்பு, புளி, காரம் போன்றவை நல்ல உணவில் இடம்பெறக்கூடாது. பெயரளவிற்கே இருக்க வேண்டும். உணவுப் பொருள்களில் விளையும்போதே சிறிதளவு உப்பும் இருக்கும். அந்த உப்பே உடம்புக்குப் போதுமானது. உப்பு அதிகமானால் இதயம், இரத்தக்குழாய்கள், சிறுநீரகம் போன்றவை தங்கள் இயல்பான பணிகளைச் செய்யவிடாமல் தடை ஏற்படும். பெருந்துயரம் உண்டாகும். தூய்மையான உணவு என்றால் எளிதாகச் செரிக்கக்கூடிய உணவாகும். உடலுக்கு வளம் தரும் உணவாகும். பாதுகாக்கும் உணவாகும். உடலும் மனமும் எப்போதும் புத்துணர்ச்சியோடிருக்க உதவும் உணவே தூய்மையான உணவாகும். தியானப் பயிற்சி போன்றவைகளில் ஈடுபடும்போது உடலை இனிமையாக்கும் உணவே நல்ல உணவு. நல்ல உணவே நல்ல உடல். நல்ல உடலிலேதான் நல்ல மனம் கொலுவிருக்கும் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. 'A sound mind is a sound body' என்பது ஓர் ஆங்கிலப் பழமொழியாகும். மனமாசு போக்கல் உடலில் உள்ள உறுப்புக்கள் நரம்பு மண்டலத்தால் இயக்கப்படுகின்றன. நரம்பு மண்டலம் மனத்தால் ஆளப்படுகிறது என்பது உளவியலார் கருத்தாகும். உள்உறுப்புகள் உள்ளே நிலவும் அந்தராத்மாவினால் ஆளப்படுகின்றன என்று வேதம் படித்தவர்கள் கூறுகிறார்கள். இயற்கை அறிவியலார் மூளையில் தான் நரம்பு மண்டலத்தின் உதவியால் உறுப்புகள் யாவும் ஆளப்படுகின்றன என்று கூறுகின்றனர். அவரவர் கண்ணோட்டத்தில் அவரவர் கருத்து சரியாக இருக்கலாம். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்வோம்.