பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 ஆத்ம சாதனங்கள் யாவும் மனத்தைப் பண்படுத்துவதன் பொருட்டேயாம். மனத்தைப் பயன்படுத்த விரும்புபவர் அதன் கூறுகளை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. மனத்தின் போக்கைச் சரியாக அறிந்து கொள்ளாமல் எத்தனை எத்தனையோ சாதனங்களைக் கையாளுகின்றவர்கள் இருக்கின்றனர். ஆத்ம சாதகர்கள் பலர் ஆயுட்காலம் வரை சாதனங்கள் புரிந்தும் எந்தவித முன்னேற்றமும் அடைவதில்லை. மனத்தை முறையாகப் பண்படுத்தத் தெரியாமையே அதற்குக் காரணம் ஆகும். முறையாகப் பண்படுத்தப்பட்ட மனது தெய்வீக இயல்பு படைத்ததாகத் திருந்தி அமைகிறது. நாள் ஏற ஏற அது அமைதியுற்றதாக மாறுகிறது. முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு அதன் விகாரங்கள் அழிந்து பட்டுப்போகின்றன. உலகப் பற்று தானா. அழிகிறது. மனமானது பண்பாடு அடைவதற்கு மாறாகச் சிற்றியல்பு படைத்ததாகவே நிறைந்திருக்குமாகில் ஆத்மசாதகன் சாதனத்தைச் சரியாகச் செய்யவில்லை என்பது வெளியாகிறது. ஓர் எடுத்துக்காட்டின் மூலம் மனவிகாரங்களைத் தடுத்து நிறுத்தி ஒழுங்கு படுத்தும் முறையை அறிந்து கொள்ளலாம். சிவபெருமான் சொரூபத்தின் வாயிலாக விளங்குகிறார். மானை அவர் ஒரு கையில் ஏந்தியிருக்கிறார். அந்த மான் சிவபெருமான் முகத்தைப் பார்ப்பதையே இலட்சியமாகக் கொண்டு அவரைப் பார்த்த வண்ணமே இருக்கிறது. மனத்துக்குச் சின்னமாய் இருப்பது மான். ஏனென்றால் மான் போன்று மனதும் துள்ளிக் குதித்து நாலா பக்கமும் ஓடுகிற பாங்கு உடையது. அலைந்து திரிகிற மனத்தை ஓர் உயர்ந்த இலட்சியத்திற்கு ஒப்படைத்தல் வேண்டும். அந்த மனமானது தன்னுடைய முழு ஆற்றலையும் அந்த இலட்சியத்திற்கே பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மனதும் பண்பாடு அடைகிறது. அது ஒடுங்குகிறது. இலட்சியமும் நிறைவேறுகிறது. பிரபஞ்ச வாழ்வானது எத்தனை எத்தனையோ போக்குவரத்து உடையதாய் விளங்குகிறது. உலகில் பிறப்பின் வாயிலாக மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். மரணத்தின் வாயிலாகப் போய்க்கொண்டே இருக்கின்றனர். பற்பல நிகழ்ச்சிகள் கால ஓட்டத்தில் நடந்து கொண்டு வருகின்றன. வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிற மக்களையும் செயல்களையும் எப்போதும் கருத்தில் வாங்கிக்கொண்டு இருந்தால் அதனால் இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும்.