பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வேறு பயன் ஒன்றும் உண்டாகாது. ஆதலால் மனத்தை அத்தகைய விசாரத்தில் ஈடுபடுத்துவது பொருந்தாது. மனத்தைப் பண்படுத்த விருப்பங்கொண்டவர் எல்லாவற்றையும் சாட்சி போல் பார்க்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் பாங்கு உதவாது. மனம் சாட்சியாய் இருந்து பழகினால் மனத்தில் சலனம் குறைகிறது. முடிவில் அது சலனமற்றதாகிறது. சலன மற்ற மனமே உயர்ந்த மனமாகும். ஆற்றல் வாய்ந்த மனமாகும். மனத்தின் வகையையும் அதன் விளைவையும் கூறும் பாரதிதாசனின் பாடல் வரிகள் உயர்ந்த மனோத்துவ விளக்கங்களாக அமைகின்றன. படித்து மகிழ்வோம். தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டான் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரையுள்ளம் ! தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச் சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல் ! ஆயுதங்கள் பரிகரிப்பார் அமைதிகாப்பார் அவரவர்தம் வீடுநகர் நாடுகாக்க வாயடியும் கையடியும் வளரச் செய்வார் மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்.! தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் 'ஒன்றே' என்னும் தாயுள்ளம் தனிலன்றே இன்பம் ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே துன்பம் பிறர்க்கு நல் இன்பம்! தமக்கென்னும் துட்ட மனோபாவம் அன்பினை மாய்க்கும் அறங்குலைக்கும் புவி ஆக்கந்தனைக் கெடுக்கும் வன்புக் கெலாம் அது வேதுணையாய் விடும் வறுமை யெலாம் சேர்க்கும் 'இன்பம் எல்லார்க்கும்' என்றே சொல்லிப் பேரிகை எங்கும் முழங்கிடுவாய்