பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை மனித உடலை அலங்கரிக்கும் ஐம்பொறிகளாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் (நாற்றம்) என்பவை பொறிகளுக்குரிய புலன்களாகும். ஐம்பொறிகளும், ஐம்புலன்களும் உடனாய் நின்று ஒருங்கிணைந்து புலக்காட்சியை உருவாக்குகின்றன. 'அறிவு' என்னும் பயிர் விளைவதற்கு நிலமாக இருப்பது புலக்காட்சி . 'மண்ணின் நல்ல வண்ணம்' என்பது அறிவாகும். புலக்காட்சியில் வரவு வைக்கப்படும் செய்திகள் புத்தி, சித்தம். அகங்காரம் என்ற உட்கரணங்களால் அலசப்படுகின்றன. செய்திகள். நம்பிக்கைகள், நிகழ்வுகள் போன்ற யாவும் புலக்காட்சியில் பதிவாகின்றன. கண்ணால் பார்க்கப்பட்டது காட்சி அறிவாகிறது. காதால் கேட்கப்பட்டது கேள்வியறிவாகிறது. முகரப்பட்டது மூக்கால் அறியும் அறிவாகிறது. உடம்பின் உறுத்துதலால் - தொடுதலால் அறியப்பட்டது மெய்யறிவாகிறது. இவை தனித்தனி அறிவாகும். அறிதலாகும். இவையாவும் ஒருங்கிணைந்து திரண்ட அறிவாக வெளிவரும்போதுதான் திடப்பட்ட அறிவாகும் (Con- solidated knowledge). 'தனித்தனியே அறிதல்' அந்தக் கரணங்களின் அவையில் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. அங்கே பல்வேறு கோணங்களில் நோக்கப்படுகின்றன. முடிவு திரண்ட அறிவாக வெளிப்படுகிறது. வெளிப்பட்ட அறிவு மீண்டும் புறஉலகில் வைக்கப்படுகிறது. புறஉலகில் நடத்தப்படும் தேர்வில் வெற்றிபெற வேண்டும். நம்முடைய அறிவு உண்மையான அறிவா அல்லது பொய் அறிவா என்று வெளிஉலகினர் ஆராய்கின்றனர். நாமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பதினாறு இனங்களின் உண்மை அறியும் சோதனையின் மூலம் பொய் அறிவை அகற்றிவிடலாம். மெய்யறிவினால் வரும் இன்பத்தை அடையலாம். பதினாறு இனங்களாவன, 1. சரியான அறிவிற்கான வழிகள் 2. சரியான அறிவின் நோக்கம் 3. சந்தேகம் 4. குறிக்கோள் 5. எடுத்துக்காட்டுக்கள் 6. சிதானந்தம் (நிலையான தீர்வுக்கு வழிகாட்டும் உதாரணம்) 7. உறுப்பினர்கள் (பொறிகள் புலன்கள்)