பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தர்க்கம் 9. உறுதிப்படுத்தல் 10. வாதம் (பட்டிமன்றம் 11. போராட்டம் 12. குற்றங்காணல் 13. தப்பெண்ணம் அல்லது கள்ள நியாயம் 14.சொற்புரட்டு 15.உதவாத் தன்மை 16. கடிந்து பேசுவதற்கான சமயம் பார்த்திருத்தல் 65 ஆகியவைகளாகும். வாதத்திற்குரிய விஷயம் பற்றிய ஐயம் முதன்முதலாக இடம்பெறுகிறது. அடுத்து, அதை வாதிப்பதற்கான நோக்கம் (உத்தேசம்) எழும்புகிறது. அடுத்து, சிதானந்தம் அல்லது நிலையான தீர்வுக்கு வழிகாட்டும் எடுத்துக்காட்டு அல்லது உதாரணம் தலை தூக்குகிறது. அடுத்து, பிரிக்கப்பட்ட தன் ஐந்து அங்கத்தினர்களுடன் நிராகரிப்பவன் முன் வருகிறான். அடுத்துத் தர்க்கம் தொடர்கிறது. அதன்பின் வழக்கின் உண்மை நிலையின் நிர்ணயம் (தீர்வு) காணப்படுகிறது. அதற்கு எதிர்வாதம் சவால் விடுகிறது. அது போராட்டத்திற்கு வழி காட்டுகிறது. ஒருவருக்கொருவர் குற்றங்கண்டு பிடிக்கின்றனர். அதன்பின் கள்ளநியாயம் (தப்பெண்ணம்) ஊடுருவப் பார்க்கிறது. தன்னை நிலைநாட்ட முயற்சி செய்கிறது. அதன் விளைவாகப் பேசுவதை நிறுத்தி அவர்கள் ஏசுகின்றனர். எதிர்க்கட்சிக்காரரின் வாதிப்பதற்கான திறமையின்மை வெளிவந்ததன் மூலம் எல்லாவகை வாதங்களுக்கும் கேள்விக் கணைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. இவ்வாறு பலமுனைத் தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிப்பதே உண்மையான அறிவாகும். உண்மையான தெளிவான அறிவே மேன்மையைத் தரும். அறிவில் தெளிவு ஒரு தவமாகும். இனி அறிவைப் பற்றித் தமிழ்நூல்கள் கூறும் கருத்துகளை அறிவோம். குன்றக்குடி அடிகளார், "அறிவு என்பது செய்திகளின் தொகுப்பு அல்ல, நூல்களில் காணப்படுவது அல்ல. கற்றதை எல்லாம் திரும்ப உரைக்கும் மொழி அல்ல. துன்ப நீக்கத்திற்குரிய மருந்து. நேற்றைய துன்பத்தை இன்றைய இன்பமாக மாற்ற உதவுவது" என்று தெளிவுபடுத்துகிறார். இதனையே திருவள்ளுவர்,